Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) தேகத்திலே சாக்லெட் வேகத்திலே ராக்கெட் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வானம் அளந்தது வாமனன் மட்டுமா! நீங்களும் தான்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) நீ பாதி நான் பாதி கண்ணே நீயின்றி தூங்காது கண்ணே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
12:13

குறிக்கோளை நிறைவேற்ற கடுமையாகப் பாடுபடும் குணமுள்ள தனுசு ராசி அன்பர்களே!

குரு பகவான் இதுவரை 9ம் இடத்தில் இருந்து உங்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த செயல்களில் பல்வேறு வெற்றிகளை
தந்திருப்பார். பொருளாதார வளம் சிறப்பாக இருந்திருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். இந்த நிலையில் இப்போது குருபகவான் 9ம் இடத்தில் இருந்து விலகி 10ம் இடமான கன்னி ராசிக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இதனால் முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. பொதுவாக 10ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப்பார்வை மகரத்தில் விழுகிறது. இது மிக சிறப்பானது. அதன் மூலம் உங்களுக்கு வரப்போகும் எந்த  இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். ஏனெனில் குரு பார்வைக்கு சக்தி அதிகம். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். இது போதாதென்று, கேது 3ம் இடமான கும்பத்தில் இருந்து இறை அருளையும், பொருள் உதவியையும் வாரிக்கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார்.

ராகு 9ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. விவகாரமான நிலங்களை வாங்குவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது. சனிபகவான் இப்போது 12ம் இடத்தில் இருக்கிறார். அவரால் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் அதோடு ஏழரை சனிகாலம் என்பதால் சில தொல்லைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். சனியைக் கண்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவரது 7ம் இடத்து பார்வை மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். மேலும் குருவே உங்கள் ராசிநாதன் என்பதால் கவலையே பட வேண்டாம். மொத்தத்தில் எடுத்த எல்லா திட்டங்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். சிற்சில தடைகள் வந்தாலும் அதை துõசி போல் துடைத்தெறிந்து விடலாம். பொருளாதார வளம் இருந்து கொண்டே இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அவ்வப்போது செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். எனவே மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு இடம் மாறினாலும் அவர் தர வேண்டிய குதுõகலத்தை கேது தந்து விடுவார். நீ பாதி நான் பாதி என்னும் அளவுக்கு தம்பதிகள் இன்பமாக வாழ்வர். ராகுவால் சில மனக்கசப்புகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு. கார் போன்ற வாகனங்களும் வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தீவிர முயற்சியின் பேரில் நிறைவேறும். அதற்கு குருவின் பார்வை கைகொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் சிறப்பான நிலையில் இருப்பர். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு பெறலாம். கொள்முதல் தொடர்பாக அதிக அலைச்சல் இருக்கும். ஆனாலும் வருமானம் உயரும். ஏழரைச்சனி காரணமாக இரும்பு தொடர்பான தொழிலில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பொருள் விரயத்துக்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். புதிய தொழிலைத் தவிர்க்கவும். போட்டியாளர்களால் எந்த பிரச்னை வந்தாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.

பணியாளர்கள்: கடந்த காலத்தைப் போல உன்னதமாக பலனை எதிர்பார்க்க முடியாது என்றாலும், பாதகமான நிலை ஏதும் வராது. வேலையில் சீரான நிலை இருக்கும். பளு
அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தீவிர முயற்சியின் பேரில் கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் வீண் மனக் குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.

கலைஞர்கள்: பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவர். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு
கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள்: பொருளாதார வளத்தில் சிறப்பாக இருப்பர். எதிர்பார்த்த பதவி
கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

மாணவர்கள்: கடந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனை கண்டிருப்பீர்கள். அதன் மூலம் நடந்த தேர்வில் வெற்றி பெறுவதோடு நல்ல மதிப்பெண்களும் பெற்றிருப்பீர்கள். ஆனால் வரும் கல்வி ஆண்டில் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டி இருக்கும். அப்படி செய்தால் உழைப்புக்கு ஏற்ற பலனை குரு தந்து விடுவார்.

விவசாயிகள்: நல்ல பல முன்னேற்றங்களை காணலாம். நவீன தொழில் நுணுக்கத்தை கடைபிடித்து வருவாயை பெருக்குவீர்கள். புதிய சொத்து வாங்கலாம். எள், கொள்ளு, பயறு, மானாவாரி பயிர்களில் கூடுதல் மகசூலை பெறலாம். கால்நடை வளர்ப்பவர்கள் மேலும் முன்னேற்றம் காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள்: மகிழ்ச்சியாக காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் ஓரளவு வாங்குவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: குரு பகவானும், ராகுவும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யலாம். சதுர்த்தி திதியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யலாம். ஆஞ்சநேயரை வழிபடலாம்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை) »
temple
நல்லவர்களின் நட்பை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!

குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் ... மேலும்
 
temple
அனைவரிடமும் அன்பு காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்வது ... மேலும்
 
temple
குறிக்கோளுடன் பணியாற்றி வரும் கடக ராசி அன்பர்களே!
 
குருபகவான் ராசிக்கு 4-ம் இடமான துலாம் ... மேலும்
 
temple
நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளும்  சிம்ம ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 3-ம் இடமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.