Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் ... 310 கி.மீ., பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் 310 கி.மீ., பாதயாத்திரை செல்லும் முருக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை

பதிவு செய்த நாள்

18 ஏப்
2025
05:04

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நிகழ்ச்சிகள் நடந்தன. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம் என உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் அம்மன், காமதேனு, யானை, ரிஷபம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். திருவிழாவில், கடந்த, 16ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், நேற்று காலை, 6:15 மணிக்கு, சூலத்தேவருடன், மகா சக்தி மாரியம்மன் தம்பதி சமேதரராக, அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் எழுந்தருளினார். மாலை, பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இன்று காலை, அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. நாளை காலை, 10:30க்கு, கொடியிறக்கம், 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், பகல், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு,  மாலை, 7:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் எழுதருளல் நிகழ்ச்சியுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar