கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2025 10:04
கோவை; கோவை, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் வரகூர் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவ நிகழ்ச்சி நேற்று 17 ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி கீதங்களின் 5 மற்றும் 6வது தரங்கங்கள் வாழூர் திருவேதி பிரம்மஸ்ரீ ராஜகோபால சாஸ்திர குழுவினரால் பாடப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை ரசித்தனர்.