Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை பஞ்சமி; வாராஹி அம்மனுக்கு ... யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்; பிரதமர் மோடி பெருமிதம் யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை; ரூ.110 கோடியில் அமைக்கப்படுகிறது!
எழுத்தின் அளவு:
 மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை; ரூ.110 கோடியில் அமைக்கப்படுகிறது!

பதிவு செய்த நாள்

18 ஏப்
2025
11:04

சென்னை; ‘‘மருதமலையில், 110 கோடி ரூபாயில், 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும்,’’ என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். 


சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:


கோவில்கள் சார்பில் இவ்வாண்டு, 1,000 ஜோடிகளுக்கு, நான்கு கிராம் தங்க தாலி உட்பட, 70,000 ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி, திருமணம் நடத்தி வைக்கப்படும்.


ஒரு கால பூஜை திட்டம், மேலும் 1,000 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக, 25 கோடி ரூபாய் வழங்கப்படும்


அர்ச்சகர்கள், கிராமக் கோவில் பூஜாரிகள் நல வாரிய உறுப்பினராக உள்ள பூஜாரிகள், 10,000 பேருக்கு, இரு சக்கர வாகனம் வாங்க, தலா 12,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.


சென்னை மயிலாப்பூர், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோவில்களில், திருவிழா நாட்களில், கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்


திருச்செந்துார், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ஆனைமலை, பண்ணாரி, திருப்பரங்குன்றம், மருதமலை, பெரியபாளையம் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு, காய்ச்சிய பசும் பால் வழங்கப்படும்.


பெரியபாளையம் பவானி அம்மனுக்கு, 8 கோடி ரூபாயில் தங்க கவசங்கள் செய்யப்படும்


இமயமலையில் உள்ள திருக்கயிலாய மானசரோவர் ஆன்மிக பயணம் செல்லும், 500 பக்தர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியம், 50,000 ரூபாயிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.


நேபாளம், முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கான அரசு மானியம், 20,000 ரூபாயிலிருந்து, 30,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.


கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இரு சக்கர வாகன கடன், 20,000 ரூபாயிலிருந்து, 50,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.


கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 110 கோடி ரூபாயில், அருங்காட்சியகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன், அறுங்கோண வடிவ புல்வெளி நில அமைவிற்கு மத்தியில், 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்.


ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், 30 கோடி ரூபாயில், 180 அடி உயர முருகன் சிலையும், ராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி, திமிரி சுப்பிரமணியசுவாமி கோவிலில், 6.83 கோடி ரூபாயில், 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்கப்படும்.


திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரை பரப்பை, கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் திட்டம், 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.


இலவசம்; பழனி முருகன் கோவில் இழுவை ரயிலில், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். திருத்தணி, மருதமலை, அழகர்கோவில், பண்பொழி, திருச்செங்கோடு, சென்னிமலை, சிவன்மலை ஆகிய மலை கோவில்களுக்கு, மாற்றுத்திறனாளிகள், கோவில் பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.


செவிலியர் கல்லுாரிகள்; திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், புதிதாக செவிலியர் கல்லுாரிகள் அமைக்கப்படும். திருச்சி, திருவெள்ளரை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கோவில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரி அமைக்கப்படும்.கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில், பேரூர் வடவள்ளி கரிவரதராஜப்பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்கப்படும் என, சட்டசபையில் நேற்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
மேலூர்; உடன்பட்டியில் முட்புதருக்குள் மக்கள் கண்டுபிடித்த சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar