Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்பத்தில் குதூகலம் தொழிலில் அமோக லாபம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) எதிர்பாராத வருமானம் முயற்சிக்கேற்ப முன்னேற்றம்
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) எதிர்பாராத வருமானம் முயற்சிக்கேற்ப முன்னேற்றம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
09:08

ஆர்வமுடன் உழைத்திடும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 26 வரை நற்பலன் வாரி வழங்குவார். கேதுவால் மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் உள்ளன. முயற்சிக்கேற்ப வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.பொருளாதார வளம் சிறப்பாக இருந்தாலும், ஆடம்பரச் செலவும் அதிகரிக்கும். சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். புதன் செப். 13 வரை வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் நற்பலன் குறையும். ஆனால், அவரால் கெடுபலன் உண்டாக வாய்ப்பில்லை. கேதுவால் பக்தி உணர்வு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுக்கிரனால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்களின் உதவி சரியான சமயத்தில் கிடைக்கும். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பெண்களால் நன்மை ஏற்படும். ஆக.22,23ல் அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கும். ஆக.19,20, செப்.15,16ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். அதே நேரம் ஆக.29,30,31ல் அவர்களின் வகையில் ஒதுங்கி இருக்கவும். சூரியனால் உடல்நலம் பாதிக்கப்படலாம். செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம் போன்ற பிரச்னை உருவாகலாம். மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். செப். 3,4ல்
எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால், வேலையில் அதிக விழிப்புடன் இருக்கவும். பணிச்சுமையும் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆனால் உழைப்புக்கு ஏற்ற நற்பலன் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது அவசியம். சக
பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆக.17,18, செப்.13,14 ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்களுக்கு சுக்கிரன் பலத்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஆக. 26க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். புதிய முயற்சியில் தடையும் குறுக்கிடலாம். ஆனால், நற்பெயருக்கு களங்கம் உண்டாகாது.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
தொண்டர்களின் வகையில் செலவு செய்ய நேரிடும். தலைமையின் நம்பிக்கைக்கு
உரியவராகத் திகழ்வீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு,
விவகாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாது.

மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். போட்டி, பந்தயத்தில் விடாமுயற்சி இருந்தால் வெற்றி காணலாம்.

பெண்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். மாத முற்பகுதியில் சகோதரிகளால் நன்மை கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு செப். 5,6,7 தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். ஆக. 27,28ல் ஆடை, அணிகலன் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரும்.

நல்ல நாள்:  உங்கள் ராசிக்கு ஆக.17,18,19, 20, 23,24,27,28, செப்.3,4,5,6,7,13,14,15,16 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான விருச்சிகத்தில் சந்திரன் செப்.8,9ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டஎண்: 5,7 நிறம்: சிவப்பு,வெள்ளை

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை சனீஸ்வரரை வணங்கி ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar