Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்களம் தரும் மஞ்சள் மகிமை! நல்லதே அருளும் நரசிம்ம வழிபாடு! நல்லதே அருளும் நரசிம்ம வழிபாடு!
முதல் பக்கம் » துளிகள்
மகிமைகள் தரும் மதுராஷ்டகம்
எழுத்தின் அளவு:
மகிமைகள் தரும் மதுராஷ்டகம்

பதிவு செய்த நாள்

01 டிச
2016
03:12

மதுரா நாயகனான கண்ணனைப் போற்றி வல்லபாசார்யர் அருளிய மகத்துவமான துதிப்பாடல் இது. எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்த அஷ்டகத்தைப் பாடி, கண்ணனை வழிபட, நம் கஷ்டங்கள் யாவும் நீங்கும்; கண்ணன் அருளால் நம் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்.

அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

கருத்து: அதரம் இனிமை, முகம் இனிமை, கண் இனிமை, சிரிப்பு இனிமை, இதயம் இனிமை, நடப்பது இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே!

வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

கருத்து: வார்த்தை இனிமை, சரித்திரம் இனிமை, வஸ்திரம் இனிமை உத்தம புருஷர்களுக்கு இருக்கும் மடிப்புச் சதை இனிமை, அசைவது இனிமை, சுற்றுவது இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.

வேணூர் மதுரோ ரேணுர்மதுர:
பாணிர்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

கருத்து: புல்லாங்குழல் இனிமை, தூளி இனிமை, கை இனிமை, பாதங்கள் இனிமையானவை, நர்த்தனம் இனிமை, சிநேகம் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்தயாவும் இனிமையே.

கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம்
மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

கருத்து: சங்கீதம் இனிமை, அருந்துதல் இனிமை, சாப்பிடுதல் இனிமை, தூக்கம் இனிமை, ஸ்வரூபம் இனிமை, திலகம் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.

கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

கருத்து: செய்கை இனிமை, தாண்டுதல் இனிமை, கிரஹித்தல் இனிமை, நினைப்பு இனிமை, வமணம் இனிமை, அடக்கம் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.

குஞ்ஜா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

கருத்து: குஞ்ஜா (குந்துமணி மாலை) இனிமை, முத்துமாலை இனிமை, யமுனை இனிமை, அலை இனிமை, ஜலம் இனிமை, தாமரை இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்தயாவும் இனிமையே.

கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம்
மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் ஸிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

கருத்து: கோபிகை இனிமை, லீலை இனிமை, சேர்க்கை இனிமை, அனுபவம் இனிமை, பார்வை இனிமை, மீதம் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.

கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர்
மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

கருத்து: கோபர்கள் இனிமையானவர்கள், பசுக்கள் இனிமையானவை, கம்பு இனிமை, உண்டாக்குதல் இனிமை, முறித்தல் இனிமை, பயனளித்தல் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.

இந்த மதுராஷ்டகத்தைப் பாடி மதுசூதனை வழிப்பட்டால், நம் வாழ்க்கையிலும் இனிமையே நிறைந்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar