Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குடும்பத்தில் குதூகலம் துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அரசு வகையில் நன்மை தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2017
15:04

சுறுசுறுப்புடன்  பணியாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!

ராசிக்கு  5ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன், 11ம் இடத்தில் இருக்கும் குரு  நற்பலன் வழங்குவர். ராசிநாதனான செவ்வாய் ஏப்.11 வரை வளர்ச்சிக்கு வழிவகுப்பார். மற்ற கிரகங்களால் ஓரளவு நன்மை உண்டாகும். சுக்கிரன், குரு பலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பக்தி எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.

பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். செவ்வாயால் புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கணவன், மனைவி இடையே பிரச்னை தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.  பெரியோர் ஆலோசனையை ஏற்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். மார்ச் 14,  ஏப்.9,10,11ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மார்ச் 25,26ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.  மார்ச் 18,19ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம்.  உஷ்ணம், பித்தம், மயக்கம் போன்ற பிரச்னை ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் சுக்கிரனால் லாபம் படிப்படியாக உயரும். அவ்வப்போது போட்டியாளர் வகையில் இடையூறை சந்திக்கலாம். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய முதலீடு, விரிவாக்க விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. புதனால் வீண் அலைச்சல், திடீர் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு. மார்ச் 15,16,17,20,21,22 ஏப்.12,13ல் சந்திரனால்  தடைகள் வரலாம். மார்ச் 30,31ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.

பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திக்க நேரிடும். இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. குருவால் விரும்பிய இடத்திற்கு பணிமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள்  தங்கள் கோரிக்கைகளை ஏப்.11க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தனியார் துறையினர் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். ஏப்.7,8ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சீராக இருக்கும்.

கலைஞர்கள் சுக்கிரன் சாதக நிலையில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரத் தொடங்கும். ரசிகர்களின் மத்தியில் பாராட்டு, புகழ்  கிடைக்கும். தொழில் ரீதியான பயணத்தால் இனிய அனுபவம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். மார்ச் 27,28,29ல் மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரிடலாம் கவனம்.

மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். புதன் சாதகமாக இருப்பதால் தேர்வில் சாதனை படைப்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். பெற்றோர், ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.

விவசாயிகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும். குறிப்பாக பழ வகைகள், பயறு வகைகள் போன்றவற்றின் மூலம்  லாபம் கிடைக்கப் பெறுவர். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஏப்.11க்கு பிறகு புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். நிலம் வாங்குபவர்கள் ஏப்.11 க்குள் வாங்கலாம்.

பெண்கள் புனித  தலங்களுக்கு சென்று வருவர். முன்னேற்றத்திற்கு தோழிகள்
உதவிகரமாக இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். ஏப். 1,2 ல்  விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 23,24ல் புத்தாடை, நகை வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வர வாய்ப்புண்டு.

நல்ல நாள்: மார்ச் 14,18,19,23,24,30,31, ஏப். 1,2,7,8,9,10,11

கவன நாள்: ஏப். 3,4 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,5   நிறம்: மஞ்சள்,வெள்ளை

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு எள்தீபமேற்றி வழிபடுங்கள். ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். தினமும் காலையில் சூரியனைத் தரிசியுங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு தழை போடுங்கள். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.