Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) போட்டியில் வெற்றி விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குடும்பத்தில் குதூகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குடும்பத்தில் குதூகலம்

பதிவு செய்த நாள்

13 மார்
2017
03:03

உள்ளதை மறைக்காமல் சொல்லும் துலாம் ராசி அன்பர்களே!

சூரியன், புதன் அனுகூலமாக இருப்பதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் வளர்ச்சிக்கான காலமாக அமையும். 5ம் இடத்தில் இருந்து பிரச்னை அளித்த சூரியன்  6ம் இடத்திற்கு மாறுவது சிறப்பான அமைப்பாகும். புதனால் பிரச்னை அனைத்தும் விலகுவதோடு, வாழ்வில்  முன்னேற்றம் காண்பீர்கள். 11ம் இடத்தில் இருக்கும் ராகு தொடர்ந்து நற்பலன்  கொடுப்பார். வெளியூரில் இருந்து சுபசெய்தி வந்து சேரும். பொருளாதார வளம் பெருகும். சமூகத்தில் மதிப்பு உயரும். சனி சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது பிரச்னை தலைதூக்கலாம். குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். பொன், பொருள் சேர வாய்ப்புண்டு.  பெண்கள் உறுதுணையாக  செயல்படுவர்.  கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்ச்சி நடத்திடும் சூழ்நிலை உருவாகும்.  நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர  வசதி அதிகரிக்கும். மார்ச் 15,16,17  ஏப்.12,13ல் பெண்களால் பணம் வர வாய்ப்புண்டு. விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 23,24ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று விலகி இருக்கவும்.  அதே நேரம் ஏப்.7,8ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஏப்.3,4ல் உடல் நலனில்  அக்கறை காட்டுவது நல்லது.செவ்வாயால் அவ்வப்போது அலைச்சல் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். லாபம் படிப்படியாக உயரும். போட்டியாளர்களால் ஏற்பட்ட முட்டுக்கட்டை விலகும். கேதுவால் குறுக்கிடும் தடைகளை உடைத்து முறியடித்து முன்னேற்றம் காண்பீர்கள். விரிவாக்க முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிக முதலீடு செய்ய வேண்டாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் விரைவில் ஊர் திரும்புவர். மார்ச் 14,18,19, ஏப்.9,10,11ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். மார்ச்  27,28,29ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய பதவி, பணியிடத்தில் செல்வாக்கு போன்றவை கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு விரைவில்  மாற்றம் பெறலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  ஏப்.5,6 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும். முயற்சியில் தடை, மனதில் சோர்வு குறுக்கிட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் இழுபறி  நிலை உண்டாகும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மார்ச் 25,26ல் மனக்குழப்பம் உண்டாக வாய்ப்புண்டு.

மாணவர்கள் கல்வியில் சிறப்பான நிலையை அடைவர். போட்டி, பந்தயங்களில்  பங்கேற்று வெற்றி வாகை சூடுவர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணை நிற்கும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப அதிக வருமானத்தைக் காண்பர். நெல்,கேழ்வரகு, கம்பு, சோளம்  போன்ற தானிய வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடைவளர்ப்பின் மூலம் ஓரளவு லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில்  எதிர்பார்த்த முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.

பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். குடும்பத்தினர் மத்தியில்
நற்பெயர் உண்டாகும். உங்களால் குழந்தைகளின் நிலை சிறப்படையும். அண்டை வீட்டாரின் தொல்லை இனி இருக்காது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு
மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மார்ச் 30,31 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். மார்ச் 20,21,22ல் புத்தாடை, நகை வாங்க வாய்ப்புண்டு.

நல்ல நாள்: மார்ச் 15,16,17,20,21,22,27,28, 29,30,31  ஏப். 5,6,7,8,12,13

கவன நாள்: ஏப்.1,2 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,7,9  நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரனை எள் எண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள். வியாழனன்று  தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி  வணங்குங்கள். பிரதோஷத்தன்று சிவன் கோவிலில் நந்தீஸ்வரருக்கு அருகம்புல்  சாத்தி வழிபடுங்கள்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar