அரசமரம் மும்மூர்த்தி வடிவம் கொண்டது. அடிப்பக்கம் பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, கிளைகளைக் கொண்ட மேற்பாகம் சிவன். ஆயுர் விருத்தி பகவத் தஸ்யவர்த்தந்தே ஸர்வ ஸம்பத என்ற பத்மபுராண ஸ்லோகப்படி இதை வணங்குபவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும். செல்வம் பெருகும். திங்கள்கிழமை அமாவாசை வந்தால் அந்நாளை அமாசோமவாரம் என்பர். அன்று அரசமரத்தை சுற்றினால் புண்ணியம் கிடைக்கும்.