பதிவு செய்த நாள்
24
ஜன
2025
12:01
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முதல் நடைபெற்று வந்த அத்யயன விழா நேற்று வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்த நிகழ்வில், ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோயிலின் ரங்கநாயகுல மண்டபத்தில் பிரபந்த கோஷ்டி சேவை நடைபெற்றது. கடந்த 25 நாட்களாக, ஸ்ரீவாரி கோயிலில் உள்ள ஸ்ரீ வைணவ பக்தர்கள் 12 ஆழ்வார்கள் இயற்றிய திவ்ய பிரபந்த பாசுரங்களை தினமும் கோஷ்டி கானம் மூலம் சுவாமிக்கு செய்து வந்தனர். நிகழ்ச்சியில் ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தத்தின் 4,000 பாசுரங்கள் படிக்கப்பட்டது.
அத்யயன விழாவின் கடைசி நாளான நேற்றுதண்ணிரமுது விழா நடைபெற்றது. அத்யயன விழா முடிந்த பிறகு, இன்று ஜன.,24ல் மலையப்ப சுவாமி, ஸ்ரீ தேவி பூதேவியுடன் தட்சிண மட வீதியில் உள்ள ஸ்ரீ திருமலைநம்பி கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு திருமலைநம்பி தண்ணீர்முடு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த பக்தரான ஸ்ரீ திருமலைநம்பியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடைபெற்று வருவது குறிபிடத்தக்கது. விழாவில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயர் சுவாமி, திருமலை ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.