சர்வ சக்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2025 10:01
கடலுார்; கடலுார், கூத்தப்பாக்கத்தில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலில், மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. கடலுார் கூத்தப்பாக்கம் எல்.ஐ.சி.,நகரில் புதிதாக கட்டப்பட்ட சர்வ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த டிச., 5ம் தேதி நடந்தது. தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 47நாட்களாக தினசரி மாலை சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் 48வது நாளில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சொர்ணாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று சர்வ சக்தி விநாயகர், ஆதிவிநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகர் மற்றும் துர்க்கை அம்மனுக்கு கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. மாலை உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.