சிவனுக்கும், காளிக்கும் நடனப்போட்டி நடந்தது. இதில் சிவன் ஊர்த்துவ தாண்டவம் என்னும் வலது காலைத் தூக்கி ஆடியதால் வெற்றி கிடைத்தது. இக்கோலத்தில் சிவன் காட்சி தரும் தலம் திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு. இங்குள்ள நடராஜர்ரத்தின சபா பதிஎனப்படுகிறார். இவரது நடனத்திற்கு ஈடு கொடுத்து காளி ஆடி யதை பார்வதி ஆச்சரியமாகப்பார்த்தாள். இதனால் அவளுக்கு சமீசீனாம்பிகை (ஆச்சரியப்படுபவள்) எனப் பெயர் வந்தது. இடது கை நடு விரலை மடக்கி, கன்னத்தில் கை வைத்த நிலையில் ஆச்சரிய கோலத்தில் காட்சியளிக்கிறாள்.