விவேகானந்தர் அனுமனைப் பின்பற்றி மக்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார். மகா வீரஅனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவர் ராம பிரானின் உத்தரவுப்படி கடலையும் தாண்டிச் சென்றார். அவருக்கு வாழ்வையும், சாவையும் பற்றிய கவலை சிறிதும் இல்லை. அவர் தன் புலன்களை முற்றிலும் அடக்கி ஆட்சி செய்தார். அற் புதமான புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் அவர் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார். இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் உலகையே பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வதிலும் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. ராம சேவையைத் தவிர மற்ற அனைத்தையும் அறவே புறக்க ணித்தார். பிரம்மலோக பதவியையோ, சிவலோகப் பதவியையோ கூட அவர் பெரிதாக கருதாமல் வேண்டாம் என்று ஒதுக்கினார். அவரு டைய வாழ்க் கையின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய் வது மட்டுமே. முழு மனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு செய்யும் சேவையே அனுமனிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண் டிய பாடம்.