பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.
மாத வாரியாக சிவ பூஜைபொருட்கள்: ஒரு தமிழ் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் சிவபெருமானை வணங்கும்போது, குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து வணங்கலாம் என வரையறை செய்துள்ளனர். சித்திரை மரிக்கொழுந்து வைகாசி சந்தனம் ஆனி முக்கனி ஆடி பால் ஆவணி நாட்டுச்சர்க்கரை புரட்டாசி அப்பம், ஐப்பசி அன்னம், கார்த்திகை தீபவரிசை, மார்கழி நெய், தை கரும்புச்சாறு, மாசி நெய்யில் நனைத்த கம்பளம், பங்குனி கெட்டித்தயிர்.