திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்கியத்திற்காக ஆடிச்செவ்வாயில் அவ்வையார் நோன்பு மேற்கொள்வர். இதில் ஆண்கள் பங்கேற்பது கூடாது. செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி வழிபாடு மேற்கொள்வர். கன்று போடாத பசுவின் சாணத்தால் அவ்வையாருக்கு உருவம் செய்வர். புங்க இலை, புளிய இலைகளைப் பரப்பி அதன் மீது அவ்வையாரை பிரதிஷ்டை செய்வர். பச்சரிசி மாவில் உப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்து படைப்பர். பூஜைக்கு தலைமை தாங்கும் வயதான சுமங்கலி, அவ்வையார் வரலாறைச் சொல்லி விட்டு, முடிவில் வட்ட வடிவ பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மாங்கல்யத்தை காட்டுவார். நீரில் தோன்றும் பிம்பத்தை மற்ற பெண்கள் வழிபடுவர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த நோன்பு மேற்கொள்ளப்படுகிறது.