திருச்செந்தூர் கடலை வதனாரம்ப தீர்த்தம் என்பர். இங்கு நாழிக்கிணறு தீர்த்தமும் உள்ளது. செந்திலாண்டவனை தரிசிக்கும் முன்பு நாழிக் கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் நீராட வேண்டும். முருகப் பெருமான் தன் வேலால் உருவாக்கிய நாழிக்கிணறு ஒரு சதுர அடி பரப்பும், ஏழு அடி ஆழமும் கொண்டது. குறையாத நீர் சுரக்கும் இயல்பு உடையது. பெரிய கிணற்றின் உள்ளே 34 படிகள் இறங்கிச் சென்றால் நாழிக்கிணற்றை அடையலாம்.