வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே!
துர்க்காதேவி சரணம்
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்பவள் ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள் ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன் ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே