ராவணனை வதம் செய்த பாவம் தீர ராமர், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தீவு ராமேஸ்வரம். அவர் பிரதிஷ்டை செய்த சிவன் ராமநாதர் என்றும் அனுமன் பிரதிஷ்டை செய்த சிவன் விஸ்வநாதர் என்றும் வழங்கப்படுகிறது. காசி யாத்திரை சென்றவர்கள், அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்கின்றனர். கோயிலுக்குள் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இங்குள்ள கடல், அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. ஆடி அமாவாசையன்று நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும்.