Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) - குடும்பத்தில் குதூகலம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ஆடம்பர வசதி பெருகும் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
10:03

செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

இம்மாதம்  புதன் செப்.2-ல் இடம் மாறி நன்மை தருவார். சுக்கிரன் செப்.15- வரை நற்பலன் கொடுப்பார்.  சூரியன், கேதுவால் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும்.  மற்ற
கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதிப்பு உண்டாகாது. கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

குரு பகவான்  11-ம் இடத்தில் இருப்பதால் நன்மை பல பெற்றிருப்பீர்கள்.
குறிப்பாக புதிய பதவியும், சம்பளஉயர்வும் கிடைத்திருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருந்திருக்கும். பணப் புழக்கம்மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் குருவால் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பீர்கள்.

அவர் செப்.2-ல் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படலாம்.  மனதில் கவலை உருவாகலாம். வீண் அலைச்சலைச் சந்திக்கலாம்.

குடும்பத்தில் ஆடம்பர வசதி பெருகும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மகிழ்ச்சி உண்டாகும். செப்.2-க்கு பிறகு பெண்கள் அனுகூலமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். ஆக.29,30-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.24,25-ல் உறவினர் வருகையால் உதவி கிடைக்கும். செப்.5,6ல் அவர்களால் பிரச்னை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரம் சீரான வளர்ச்சிப் பாதையில் செல்லும். எதிரிகளின் இடையூறு இருக்கும் இடம் தெரியாமல் மறையும். சேமிக்கும் விதத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள்,  அவர்களின் பிடியில் இருந்து செப்.2-க்கு பிறகு விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். செப்.10,11-ல் திடீர் பணவரவு இருக்கும். ஆக. 26,27,28,31, செப்.1,2-ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம்.

பணியாளர்கள் செப்.2-வரை பணிச்சுமையைச் சந்திக்க நேரிடும். சகஊழியர்களுடன் கருத்துவேறுபாடு உருவாகலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. செப்.2-க்கு பிறகு பணியிடத்தில் நிலைமை சீராகும்.  வேலையில் திருப்தி  ஏற்படும். எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஆக.22,23-ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.

பணியிடத்தில் செல்வாக்கு  கொடி கட்டி பறக்கும். கலைஞர்கள்- புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் வளர்ச்சிப்பாதையில் வெற்றிநடை போடுவர். எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள்- கல்வியில் முன்னேற்றம் காண்பர்.

ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி அடைவர்.

விவசாயிகள்  அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும். ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். கால்நடை மூலம்  நல்ல வருமானம்  கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்

பெண்கள்- கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர்.   குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வர வாய்ப்புண்டு. செப்.3,4-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. ஆக.17, செப்.12,13-ல் விருந்து விழா என செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ஆக.28-க்கு  பிறகு  அக்கம் பக்கத்தினருடன் கருத்துவேறுபாடு உருவாகலாம்.

நல்ல நாள்: ஆக.17,22,23,24,25,29,30
செப். 3,4,10,11,12,13
கவன நாள்: ஆக.18,19,செப். 14,15- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3,6      
நிறம்: சிவப்பு, வயலட்

பரிகாரம்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
* வெள்ளியன்று காளியம்மனுக்கு நெய் விளக்கு
* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை.

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை ... மேலும்
 
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.