திருப்பதி அருகிலுள்ள நாராயணபுரத்தை ஆட்சி செய்தவர் தொண்டைமான். இவர் ஒருநாள் திருப்பதி மலை மீதுள்ள வேங்கடாத்ரிக்கு யானை ÷ வட்டைக்குச் சென்றார். வழியில் ஒரு பஞ்சவர்ணக்கிளியைக் கண்டார். அதன் தெய்வீக அழகில் ஈடுபட்ட மன்னர், கிளியை பிடிக்க முயன்றார். அந் தக் கிளி அங்கு வரும் பக்தர்கள் சொல்லும் ‘வெங்கடேசா கோவிந்தா’ என்று திருநாமத்தை அடிக்கடி கேட்கும். அதையே திரும்பத் திரும்பச் சொல்லும். மன்னர் பிடிக்க முயன்றதும், இந்த நாமங்களைச் சொன்னபடியே பறந்தது. திருப்பதி கோவில் அருகிலுள்ள சுவாமி புஷ்கரணி என்னும் குளக்கரையை அடைந்தது. மன்னரும் விடாமல் சென்றார். கிளியைக் காணவில்லை. ஆனால், அங்கே வெங்கடேசப் பெருமாள் வீற்றிருந்தார். பிறகு ஏழுமலையானுக்கு கோவில் கட்டினார்.