Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதிலமடைந்த பழமை வாய்ந்த பெருமாள் ... தாயுமானவ சுவாமிகளின் குருபூஜை விழா; சுவாமிக்கு அபிஷேகம், பஜனை தாயுமானவ சுவாமிகளின் குருபூஜை விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

23 ஜன
2025
04:01

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகேயுள்ள கள்ளக்கொளத்தூர் கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், தியாகு உள்ளிட்டோர் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட குழுவினர், கள்ளக்கொளத்துார் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த அரிய விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டது. 


இதுகுறித்து, செங்குட்டுவன் கூறியதாவது: கள்ளக்கொளத்தூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள தூர்ந்து போன கிணறு ஒன்றின் மேற்பரப்பில், தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் இருந்த சிற்பத்தை, அண்மையில் அக்கிராம மக்கள் எடுத்து பார்த்துள்ளனர். அது ஒரு கலைநயம் மிக்க விநாயகர் சிற்பமாகும். பெரிய அளவிலான கண்கள், நீண்டிருக்கும் துதிக்கை, அகன்ற காதுகளுடன் விநாயகர் சிலையாக காட்சியளிக்கிறார். நான்கு கரங்களுடன் காணப்படும் விநாயகர், கால்களை மடக்கிய நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். விநாயகரது பின் வலது கரத்தில் பாச கயிறும், இடது கரத்தில் மழுவும் காணப்படுகின்றன. முன்னிரு கரங்களில் இருப்பது தெளிவாக தெரியவில்லை.  இந்தச் சிற்பம், பல்லவர் காலத்தைச் சேர்ந்தது (கி.பி.8ம் நூற்றாண்டு) என்பதை, மூத்த தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கிடைத்துள்ள விநாயகர் சிற்பம், மிகவும் வித்தியாசமாகவும், அரியதாகவும் அமைந்துள்ளது. சிற்பம் வடிக்கப்பட்டுள்ள கல், மணற்கல் வகையைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. பல்லவர் கலை வரலாற்றுக்கு இந்த விநாயகர் சிற்பம் புதிய வரவாகும். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தச் சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், விஜய வருஷத்திய ஸ்ரீ சாரத நவராத்திரி மஹோத்ஸவம் செப் ... மேலும்
 
temple news
வேளாங்கண்ணி; வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, ஹிந்து கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை யு.கே.சி.நகர் கிணத்தடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.உடுமலை யு.கே.சி நகரில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar