மகா கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்; இதுவரை 9.24 கோடிக்கும் அதிகமானோர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2025 02:01
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா துவங்கி பிப்.,26 (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தப்படுகிறது. அதிலும் சிறப்பாக, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கிரகங்கள் நேர்கோட்டில் சேரும்போது மகா கும்பமேளா நடக்கிறது. மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மஹா கும்பமேளாவில் உலகம் முழுவதும் இருந்து பல கோடி பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று 46.81 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதுவரை, 9.24 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்த மஹா கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமானோர் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.