ஆயிரம் என்றால் ஒரு எண் என்று தெரியும். இதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. மகா பாரத யுத்த களத்தில் பீஷ்மர் உயிர் விட காத்திருந்தார். கிருஷ்ணர் அவரருகில் வந்த போது, கிருஷ்ணரை ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்கினார். இதை விஷ்ணு சகஸ்ரநாமம் என்பர். சகஸ்ரம் என்றால் ஆயிரம். இதன்படி, பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் தான் உண்டு என முடிவு செய்து விடக்கூடாது. அவனுக்கு எண்ணிக்கையில் அடங்காத பெயர்கள் உள்ளன. ஆயிரம் என்ற சொல்லுக்கு அளவிட முடியாதது என்ற ஒரு பொருளும் உள்ளது என விஷ்ணு தர்மம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.