Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: காத்திருக்கு பதவி உயர்வு மிதுனம்: காத்திருக்கு பதவி உயர்வு சிம்மம்: வெற்றி வாகை சூடுவீங்க! சிம்மம்: வெற்றி வாகை சூடுவீங்க!
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
கடகம்: வரப்போகுது வசந்த காலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:50

அனைவரிடமும் அன்பு காட்டும் கடக ராசி அன்பர்களே!

புதன்  இந்த மாதம் சாதகமான இடத்திற்கு வருகிறார். செவ்வாய் டிச. 31 வரை நற்பலன் கொடுப்பார்.  சுக்கிரனால் வாழ்வில் வசந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். செல்வாக்குடன் திகழ்வீர்கள்.

குடும்பத்தில் கருத்துவேறுபாடு நீங்கி சுமூக நிலை ஏற்படும்.  உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர வசதி பெருகும். மாத பிற்பகுதியில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பொன், பொருள் சேரும் யோகமுண்டு. டிச.3,4ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் நவ.17,18, டிச. 14,15ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். டிச. 7,8 ல் பெண்களால் நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் வளர்முகமாக இருப்பீர்கள். கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். பகைவர்களின் தொல்லை குறுக்கிட்டாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். புதனால்  அவ்வப்போது அலைச்சல் ஏற்படலாம். நவ.21,22,23ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். டிச.1க்கு பிறகு  பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி உண்டாகும். அரசு பணியாளர்கள் தங்கள் கோரிக் கைகளை டிச.2க்குள் கேட்டு பெறுவது நல்லது. தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவது எளிதல்ல. சிலர் திடீர் பணி,  இடமாற்றத்திற்கு ஆளாவர். வேலை நிமித்தமாக சிலர்  குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். டிச.1,2 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

கலைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்டு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். விருது அல்லது பாராட்டுக்கு குறைவிருக்காது. சக பெண் கலைஞர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகள்  எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கப் பெறுவர்.  சமூகநல சேவகர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். டிச.1 க்கு பிறகு மற்றவர்களிடம் அனுசரித்து போவது நல்லது.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.

விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர். எள், கரும்பு, கீரை, பழ வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர்.  கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் டிச.2க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர்.  கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். டிச.11,12,13ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.. நவ.24,25ல் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும்.  தனியார் துறையில்  வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருக்கும்.

* நல்ல நாள்:  நவ.21,22,23,24,25, டிச.1,2,3,4,7,8,11,12,13
* கவன நாள்: நவ. 26,27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:4,8, நிறம்: வெள்ளை, நீலம்

* பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* சனிக்கிழமை அனுமனுக்கு துளசி அர்ச்சனை
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.