Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 10. குலசேகர ஆழ்வார் 12. மதுரகவி ஆழ்வார் 12. மதுரகவி ஆழ்வார்
முதல் பக்கம் » பிரபந்தம் அறிமுகம்
11. நம்மாழ்வார்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 டிச
2011
05:12

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : வைகாசி விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்
பிற பெயர்கள் : மாறன், ஸடகோபன், குருகையர்கோன், வகுளாபரணன், பராங்குஸன்

வைணவத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வரைத் தான் குறிக்கும்.

வடமொழியின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு ஒப்பான திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களை அருளியவர் நம்மாழ்வார்.

ஆழ்வார் அவதரிக்கும் போது ஆத்ம ஞானத்தை மறைக்கிறசடம் என்னும் காற்று தம்மை நெருங்க அதனைக் கோபித்துக் கொண்டார். அதனாலேயே இவருக்கு சடகோபன் என்கிற பெயர் உண்டாயிற்று. மேலும் இவருக்கு பராங்குரர், வகுளாபரணர் என்ற பெயர்களும் உண்டு ஆழ்வார் பிறந்த போதிலிருந்தே பால் உண்ணாமலும், அழாமலும், சிரிக்காமலும், வளர்ந்து வந்தார். இதனால் பெற்றோர் மிகவும் வருந்தினர். திருவநந்தாழ்வான் திருப்புளிமரமாக வளர்ந்திருக்க அந்த மரத்தடியில் தொட்டில் கட்டி மாறன் என்ற பெயரிட்டு அங்கேயே விட்டுப்போனார்கள். ஆழ்வாரும் திருப்புளி மரத்தில் குகை போன்ற பொந்தில் பதினாறு வருஷங்களை கழித்தார்.

திருமாலுக்குரிய திவ்விய தேசங்களில் 37 திவ்விய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அயோத்தியில் இருந்த மதுரகவி ஆழ்வார் தெற்கே வந்து நம்மாழ்வாரை வணங்கி அவருக்கு சேவை செய்து வந்தார். நம்மாழ்வார் பெருமானின் குணங்களை சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் எழுதுவார். நம்மாழ்வார் அனுபவித்து சொல்லும் பொழுது மயக்கம் அடைந்து விடுவார். அப்பொழுதெல்லாம் மதுரகவியாழ்வார் தான் இவரை மயக்கம் தெளிவிப்பார்.

நம்மாழ்வார் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இவ்வுலக வாழ்க்கையை வேண்டினார். இப்பொழுதும் ஆழ்வார் திருநகரியில் இவர் தவம் செய்த புனித புளியமரம் உள்ளது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார் தனியாக சென்று 16 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 19 கோயில்களையும் என மொத்தம் 35 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

 
மேலும் பிரபந்தம் அறிமுகம் »
temple news

நூல் சிறப்பு! டிசம்பர் 13,2011

நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது பெருமாளை குறித்து 1. பொய்கையாழ்வார்,  2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார், 4. ... மேலும்
 
temple news

1. பொய்கையாழ்வார் டிசம்பர் 13,2011

12 ஆழ்வார்கள் பற்றிய விபரம்: பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், ... மேலும்
 
temple news

2. பூதத்தாழ்வார் டிசம்பர் 13,2011

பிறந்த ஊர் : மகாபலிபுரம்பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டுநட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை ... மேலும்
 
temple news
பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டுநட்சத்திரம் : தை ... மேலும்
 
temple news

3. பேயாழ்வார் டிசம்பர் 13,2011

பிறந்த ஊர் :  மயிலாப்பூர்பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டுநட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar