உடுமலை திருப்பதியில் பொது தேர்வு மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2026 12:01
உடுமலை; திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பத்தாம் வகுப்பு , 12ஆம் வகுப்பு மற்றும் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர்களுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வரும் பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டி நடந்த யாக பூஜையில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் எழுது பொருட்களை வழங்கினார்.