கச்சிராயபாளையத்தில் ஆற்று திருவிழா: சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2026 11:01
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையத்தில் நடந்த ஆற்று திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி ஆற்று திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. விழாவில் கச்சிராயபாளையம் மற்றும் வடக்கனந்தல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள், வடக்கனந்தல் அகிலாண்டேஸ்வரி சமேத உமா மகேஸ்வரர், கச்சிராயபாளையம் பாலமுருகன் ஆகிய சுவாமிகள் ஊர்வலமாக கோமுகி ஆற்றங்கரைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. பின்னர் கோமுகி நதிக்கரையில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவில் சுற்றுவட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.