Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரிக்குடி சிவன் கோயிலில் ... ஆலங்குடியில் சிவலிங்கத்தின் சூரிய ஒளி: ஜொலித்த மூலவரை கண்டு பக்தர்கள் தரிசனம் ஆலங்குடியில் சிவலிங்கத்தின் சூரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் தங்க கருட சேவை; ஒரே இடத்தில் 11 பெருமாளை தரிசித்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருநாங்கூரில் தங்க கருட சேவை; ஒரே இடத்தில்  11 பெருமாளை தரிசித்து பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2026
10:01

மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழுக்கமிட்டு வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 வைணவ திவ்ய தேசங்களுல் நாராயண பெருமாள், குடமாடகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்டபெருமாள், அண்ணன்பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுந்த நாதன், மாதவபெருமாள், பார்த்தசாரதி, கோபாலன், உள்ளிட்ட 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை அம்மாவாசை மறுநாள் பிரசித்திபெற்ற 11 கருடசேவை உத்ஸவம் நடைபெறும். இவ்வாண்டு கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை 11 பெருமாள்களும் திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் எழுந்தருள சிறப்புத் திருமஞ்சணம் செய்யப்பட்டது. நேற்று இரவு 12:30 மணிக்கு மணிமாட கோயில் கோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது, அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடி பெருமாள்களை சேவித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. தமிழகம் மட்டுமன்றி பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாள்களை சேவித்து இறையருள் பெற்றனர். கருட சேவையை முன்னிட்டு எஸ்பி. ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மயிலாடுதுறை, சீர்காழியில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar