Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

குன்னூரில் குழந்தை ஏசு சிற்றாலய ... திருவண்ணாமலையில் தீர்த்தவாரி முடிந்து கோவில் திரும்பினார் அருணாசலேஸ்வரர் திருவண்ணாமலையில் தீர்த்தவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் 11 தங்க கருடசேவை: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
16:13

மயிலாடுதுறை: திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க கருடசேவை உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேசங்கள் நாங்கூர் மணிமாடக்கோயில் நாராயண பெருமாள், அரிமேய வின்னகரம்  குடமாடு கூத்தர்,  செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள்,  வண்புருடோத்தம பெருமாள்,  வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம்  வரதராஜ பெருமாள், கீழச்சாலை  மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி,  பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்ய தேச கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் பிரசித்தி பெற்ற 11 கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம்.

இவ்வாண்டு 124ம் ஆண்டு கருட சேவை உத்ஸவம் நேற்று இரவு நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும் தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு மணிமாடக்கோயிலுக்கு நேற்று மா லை எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் நடை பெற்றது. இரவு 12:30மணிக்கு மணிமாட கோயில் ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளி னர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடை பெற்று, கும்ப தீபஆரத்தி எடுக்கப்பட்டு சிறப்பு மிக்க தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடினர். தொடர்ந்து இரவு 1:30 மணிக்கு, 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. கருடனுக்கு உகந்த வியாழக் கிழமையில் நடை  பெற்ற இந்த தங்க கருட சேவை உத்ஸவத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்பட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வந்தி ருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு 11 பெருமாளையும் ஒரே இடத்தில் கண்டு சேவித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் 4 மாட வீதிகளையும் வலம் வந்து அதிகாலை மீண்டும் மணிமாடக்கோயிலில் எழுந்தருளினர். உத்ஸவத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி.சேகர் தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மயி லாடுதுறை, சீர்காழியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலைக்கு, புல்மேடு வழியாக செல்ல பக்தர்கள் இன்று (நவம்., 17ல்) முதல் ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில், மூன்றாம் நாளான இரவு அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் ... மேலும்
 
temple
மயிலாடுதுறை: சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாபவிமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த ... மேலும்
 
temple
பாலக்காடு: கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா ரத சங்கமம் நேற்று (நவம்., 16ல்), ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.