குன்னுார்;குன்னுார் ஆப்பிள் பீ பகுதியில் உள்ள குழந்தை ஏசு சிற்றாலயத்தில், 16வது ஆண்டு சிறப்பு பெருவிழா நடந்து வருகிறது.குன்னுார் ஆப்பிள் பீ பகுதியில் உள்ள அற்புத குழந்தை ஏசு சிற்றாலயத்தில் கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன், சிறப்பு பெருவிழா துவங்கியது.15ல், கோத்தகிரி புனித மேரீஸ் தேவாலய அருட்தந்தை டேவிட்; 16ல் வெலிங்டன் பேரக்ஸ் துாய யோசேப் ஆலய உதவி பங்கு தந்தை ஜோசப் சந்தோஷ் தலைமையில் ஜெப வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, ஜெபக்குழு சகோதரிகள் குழுவினரின் சார்பில் ஜெபமாலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவிழா நாளான வரும், 21ல் பகல், 12:00 மணிக்கு அன்பின் விருந்து, மாலை, 5:30 மணிக்கு குன்னுார் ஆப்பிள் பீ இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை மரியபீட்டர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு அற்புத குழந்தை ஏசுவின் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.