Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆற்றல் மேம்படும் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்:(கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அரசு வகையில் ஆதாயம் ரிஷபம்:(கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) எதிர்பாராத நன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
16:57

அன்பும் பண்பும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. சுக்கிரன் மார்ச் 27-ல் உங்கள் ராசிக்கு வந்து நன்மை தருவார். குரு ஏப்.10ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருவதால் நற்பலன் கொடுப்பார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தர காத்திருக்கிறார். செவ்வாய் 9-ல் இருப்பது சாதகமற்ற இடம் என்றாலும் அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அவரால் கெடுபலன் உண்டாகாது.

ராகு 5-ம் இடத்தில் இருப்பதும், சனி 9-ம் இடத்தில் இருப்பதும், கேது 10-ம் இடத்தில் இருப்பதும், சூரியன், புதன் 12ல் இருப்பதும் சாதகமானதல்ல. புதனால் சில தடைகள் குறுக்கிடலாம் குடும்பத்தில் மார்ச் 26- க்கு பிறகு பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன்,- மனைவி இடையே அன்பு மேலோங்கும். மார்ச் 24,25-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டாகும். மார்ச் 15,16,17, ஏப்.11,12,13-ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் மார்ச் 26,27-ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். ஏப்.9- க்கு பிறகு குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுப நிகழ்ச்சி நடத்திடும் சூழ்நிலை உருவாகும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மார்ச் 3-க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஏப்.2,3 சிறப்பான நாட்களாக இருக்கும். மார்ச்24,25ல் பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம்.ஏப்.9-க்கு பிறகு குரு சிறப்பாக இருப்பதால் தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த புதிய பதவி தேடி வரும். சுய தொழில்புரியும் பெண்க ளுக்கு விரிவாக்க பணிக்கான வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் பகைவரால் இடையூறுகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சூரியனால் அவ்வப்போது பணவிரயம் ஏற்படலாம். மார்ச் 18,19,22,23- ல் சிறு தடைகள் வரலாம். சக தொழில்புரிவோர் மத்தியில் மரியாதை எதிர்பார்த்தபடி கிடைக்காது. மார்ச்30,31, ஏப்.1-ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.   

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு.வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.

அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். ஏப்.9,10-ல் எதிர்பாராத நன்மை கிடைக்க யோகமுண்டு.

முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். மார்ச் 26-க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். மார்ச் 26-க்கு பிறகு சிறப்பான வளர்ச்சியை காணலாம். புதிய ஒப்பந்தம் கையெழுத் தாகும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சக மாணவர்களிடம் பார்த்து பழகவும்.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க பெறுவர். நெல், கோதுமை, சோளம், எள், கரும்பு, பழ வகைகளில் அதிக ஆதாயம் கிடைக்கும்.

* நல்ல நாள்: மார்ச் 15, 16, 17, 20, 21, 24, 25, 30, 31, ஏப்.1, 2, 3, 9, 10, 11, 12, 13
* கவன நாள்: ஏப்.4, 5, 6 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்-: 2, 5 நிறம்: வெள்ளை, மஞ்சள்

* பரிகாரம்:-
* ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
* செவ்வாயன்று முருகன் கோயிலில் நெய் தீபம்
* பிரதோஷத்தன்று சிவனுக்கு அர்ச்சனை.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.