Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு ... பழநியில் நாளை ரோப் கார் நிறுத்தம் பழநியில் நாளை ரோப் கார் நிறுத்தம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி 10ம் நாள்: வெற்றி தரும் நாள் விஜயதசமி
எழுத்தின் அளவு:
நவராத்திரி 10ம் நாள்: வெற்றி தரும் நாள் விஜயதசமி

பதிவு செய்த நாள்

18 அக்
2018
03:10

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் விரதமிருந்து வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று, அன்னை விஜயம் செய்கிறாள்.பத்தாம் நாள்,- சர்வ சக்தி ரூபிணியாக தரிசனமளிக்கிறாள்.அம்பிகை, மகிஷனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமியன்று, காலையில், சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும்.

அன்னத்தை நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பிரதட்சிண நமஸ்காரம் செய்து வணங்க வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும்.பூஜை முடிந்த உடனோ அல்லது மாலையிலோ, இரண்டு பொம்மைகளைப் படுக்க வைக்க வேண்டும். பிறகு, சவுகரியமான ஒரு நாளில், கொலுவை எடுத்து வைத்து விடலாம்.புதிய தொழில் தொடங்குவதும், முதன்முதலில் குழந்தைக்கு கல்வி கற்றுக் கொடுப்பதும், விஜயதசமி நாளில் தான். ஆக, நவராத்திரி என்பது, கூட்டு வழிபாட்டு முறையை வலியுறுத்தும் முக்கிய விழா.தென் மாநிலங்களில், மகிசாசுரனை சக்தி வென்ற நாளாக, கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படும். வட மாநிலங்களில், ராமன், ராவணனைக் கொன்ற நாளாக, ராம்லீலா விழாவாக கொண்டாடப்படுகிறது.பெருந்திரளான மக்கள், மைதானத்தில் கூடி, ராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரின் உருவ பொம்மையை எரியூட்டுகின்றனர்.மைசூரில், அலங்கரிக்கப்பட்ட யானை மீது அம்மனை அமர வைத்து ஊர்வலம் வருவது, மன்னர் காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு.

நாளை விஜய தசமியையொட்டி அம்பிகையை விஜயாம்பாளாக ( பார்வதியின் ஒரு அம்சம்) பூஜையறையில் மலர் கோலமிட வேண்டும். பால் பாயாசம், இனிப்பு வகை, பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சதாம், நைவேத்யம் செய்ய வேண்டும். இந்தவழிபாட்டின் மூலம் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.மகிஷாசுரன் தனக்கு ஒருபெண்ணால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் பெற்றான்.வரத்தின் பலத்தால் தேவர்களை துன்புறத்தினான். இதற்கு முடிவு கட்ட எண்ணிய சிவன், தன் ஆயுதமான திரிசூலத்தை அம்பிகைக்கு வழங்கினார்.திருமால் உள்ளிட்ட தேர்வகளும்தங்களின் ஆயுதங்களைக் கொடுத்தனர். சிங்க வானகத்தில்புறப்பட்ட அம்பிகை அசுரனை கொன்று வெற்றி வாகை சூடினாள்.விஜயதுர்கா, மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.பாட வேண்டிய பாடல்மாலையன் தேட மறை தேட வானவர் தேடநின்ற காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்புவேலை வெங்காலன் என மேல் விடும் போது வெளிநில் கண்டாய்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar