Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலன்
  ஊர்: பேளூர்
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி.  
     
 தல சிறப்பு:
     
  பெருமாள் அதிகபட்சமாக நான்கு கைகளுடன் அருள்பாலிப்பார் ஆனால் இங்கு பெருமாள் (அஷ்டபுஜ) எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபார் திருக்கோயில் , பேளூர் - சேலம் மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்திற்கு  அருகில் சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், லட்சுமி கோபாலர் திருக்கோயில், வீரபத்திரசுவாமி திருக்கோயில், காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்  ஆகிய சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளது.    
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்தில் மகம், விசாகம், சதயம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நாட்களில் திருமணத்தடை உள்ளவர்கள், கடன் தொல்லை, குடும்பத்தகராறு உள்ளவர்கள் வழிபட்டால் நிவர்த்தியாவதாக ஒரு நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
 

பெருமாளின் வடிவம் : இந்த விஷ்ணுவுக்கு எட்டுக்கரங்கள் உள்ளன. இதில் இரண்டு கைகள் மகாவிஷ்ணுவுக்குரியவை. கீழேயுள்ள இரண்டு கரங்கள் கிருஷ்ணாவதார கைகள். நான்கு கைகள் பலராமனுக் குரியவை.இடது கன்னம் பெண் கன்னம். தொட்டுப்பார்த்தால் வழுவழுப்பாக இருக்கும். வலது கன்னம் ஆண் கன்னம். சொர சொரப்பாக இருக்கும். தலைக்கு மேல் ஏழு தலை ஆதிசேஷன் உள்ளது. இடது கால் பெண்கால், இதன் மேல் பகுதியில் "பஞ்சகச்சம்" வைத்து கட்டியது போல புடவை அமைப்பு உள்ளது.வலது ஆண்கால். வலதுபக்கம் பசுவும், கன்றும், இடது பக்கம் பசுவும், காளையும் உள்ளன. அஷ்டமி, நவமி, ஏகாதசி திதிகளில் மரகதவல்லி மீனாட்சிக்கு அபிஷேகம் நடக்கும். வசிஷ்டர் இந்த சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது. வாசலில் வீர ஆஞ்சநேயர் உள்ளார். 
     
  தல வரலாறு:
     
  அன்னை பராசக்தி பல அவதாரங்களை பூமியில் எடுத்தாள். காமாட்சி, விசாலாட்சி, உலகம்மை, பார்வதி, தாட்சாயணி. இப்படி பல பெயர்களில் அவதரித்த அவள், பழங்கால மதுரையில் மீனாட்சி என்ற பெயரில் தங்கினாள். அப்போது அவளுக்கு ஒரு பக்தை இருந்தாள்.அவள் மீனாட்சியை குழந்தையாக நினைத்து தாலாட்டு பாடுவாள், தூங்க வைப்பாள், தன்னை மீனாட்சியின் அன்னையாகவே உருவகம் செய்து, பக்தியில் ஆழ்ந்தாள். பாரதியார் கண்ணனைக் காதலியாக கருதியது போல் அவளது பக்தியை மெச்சிய மீனாட்சி, முற்பிறவியில், அவளை காஞ்சனமாலை என்ற பெயரில் அரசியாகப் பிறக்கும்பிடியும், அவளுக்கு தான் மகளாகப் பிறப்பதாகவும் வாக்களித்தாள்.அதன்படியே மீனாட்சியின் பிற்கால கோயில் அமைந்தது. அவளுக்கே பெருமாள் அண்ணனாக இருந்து, சுந்தரேஸ்வரரை மணம் முடித்து வைத்தார். முந்தைய பராசக்தி வடிவமான மீனாட்சி, பெருமாளுக்கு மட்டுமல்ல.. அனைத்து உயிர்களுக்கும் தாயாகத்தான் இருந்திருக் கிறாள்.அவ்வாறு அவள் தாயாக அமர்ந்த தலம் தான், தனி சன்னதியில், வயதான தோற்றத்துடன் மரகதவல்லி மீனாட்சி என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் அதிகபட்சமாக நான்கு கைகளுடன் அருள்பாலிப்பார் ஆனால் இங்கு பெருமாள் (அஷ்டபுஜ) எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.