Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஞானஸ்கந்தர், குருநாதர்
  அம்மன்/தாயார்: ஸ்கந்தமாதா, பராசக்தி
  தல விருட்சம்: கடம்ப மரம்
  தீர்த்தம்: உத்திரவாகினி ,கன்னிமார்ஓடை
  ஊர்: உடையாபட்டி
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

-


 
     
 திருவிழா:
     
  கார்த்திகை தீபம் விசாகம் ஆகியவை ஆசிரமத்தின் சிறப்பான நாட்கள், ஆடி 18 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். 4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. ஜோதிட சாஸ்திரப்படி முருகனை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்கள் இங்குதான் உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை மணி 4 முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  ஸ்ரீ கந்தாஸ்ரமம்,உடையாபட்டி, சேலம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
 

 பஞ்ச முக ஆஞ்சநேயர், பஞ்ச முக கணபதியுடன் (திருவருள்)எதிரெதிர் சன்னதிகளில் உள்ளனர். 6 அடி உயர தன்வந்திரி பகவான் நோயற்ற வாழ்வை தருகிறார்.


 
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது.இத்தலத்தில் வணங்கினால் குருவருள் கிடைக்கும்.நோயற்ற வாழ்வு(தன்வந்திரி பகவான்),குறைவற்ற செல்வம்(ஸ்வர்ணாகர்ஷன பைரவர்) சங்கடங்கள் தீர (சங்கட ஹர கணபதி) பக்தர்கள் வழிபடலாம்.இவை தவிர பஞ்சமுக அனுமானை வணங்கி பக்தி, பலம், தைரியம், பூமி செழிப்பு, கல்வி செல்வம் ஆகியவற்றை பெறலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தித்துக்கொண்ட செயல்கள் நடந்திட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும்(இதயம்),முருகன் அறிவாகவும்(மூளை) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சன்னதிகளை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகிறது. அதனின் பயனாக உயிரான தாயார் சாந்தத்தையும் அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள்.முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் எனஜோதிட சாஸ்திரப்படி முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர் புவனேஸ்வரி முருகன் சன்னிதானத்தில் உள்ளது.
 
வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்ரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே.
 
     
  தல வரலாறு:
     
  1965 ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான் தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். காலப்போக்கில் பெரிய அளவில் எண்ணற்ற கண்கவர் சிற்பங்களுடன் கூடிய கோயிலாக இந்த ஆஸ்ரமம் கட்டப்பட்டுள்ளது. சேலம் நகருக்கு மிக அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த கந்தாசிரமம் அமைந்துள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். 4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. ஜோதிட சாஸ்திரப்படி முருகனை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்கள் இங்குதான் உள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar