Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: எல்லைப்பிடாரி அம்மன்
  ஊர்: குமாரசாமிப்பட்டி
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆண்டுதோறும் பங்குனி மாதம் இங்கு ஐந்து நாட்கள் விழா நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  அம்மன் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோயில், குமாரசாமிப்பட்டி - சேலம் மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  அம்மனுக்கு அருகிலேயே முருகனுக்கு தனியாக சிறு சன்னதி உள்ளது. பிள்ளையார் இல்லாமல் கோயிலா? அவரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
 

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற அபலைகள், விதவைகள், "எங்களுக்கும் மட்டும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை?' என்று புரியாத புதிருடன் காத்திருக்கும் முதிர் கன்னிகள்... இவர்கள் எல்லாம் அடைக்கலம் அடைவது இந்த எல்லை பிடாரி அம்மனிடம் தான்.

வந்து வணங்குவோருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக, ஊர் எல்லையை காக்கும் காவல் தெய்வமாக கருணை பொங்கும் கண்களுடன் காட்சியளிக்கிறாள் சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன்.

இந்த அம்மனின் சிறப்பே கருணை பொங்கும் கண்களுடன், பார்த்த உடனேயே தனது சொந்த தாயை பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் முகப் பொலிவு தான். எந்த நேரமும் அம்மனை தரிசிப்பதற்காக பெண்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதற்கு காரணம் எல்லை பிடாரி அம்மன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேண்டிக் கொண்ட உடனே பிரச்னைகளை தீர்த்து வைக்கிறாள்.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் இங்கு ஐந்து நாட்கள் விழா நடக்கிறது. இதில் ரொம்பவும் பிரசித்தி பெற்றது "தீ மிதி' விழா தான். எந்த கோயிலிலும் இல்லாத விசேஷமாக இங்கு மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தீ மிதிக்கின்றனர்.
இந்த கோயிலின் இன்னொரு விசேஷம் அம்மன் மேற்கு நோக்கி காட்சி அளிப்பது.

 
     
  தல வரலாறு:
     
 

65 ஆண்டுகளுக்கு முன்... இப்போது அடுக்கு மாடி கட்டடங்களாக, அரசு கலைக் கல்லூரியாக காட்சி அளித்து கொண்டிருக்கும் குமாரசாமிப்பட்டி அன்றைய தினம் ஏரியாக இருந்தது. ஏரியை சுற்றி பாம்புகளும், ஓநாய்களும் திரியும் பயங்கர காடு. இதுதான் ஊரின் எல்லை.

ஒரு முறை ஊர் மக்கள் அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு இரவில் இந்த வழியாக திரும்பி கொண்டிருந்தனர். ஏரிக்கரை அருகே நாகசர்ப்பம் ஒன்று இவர்களை துரத்தியது. அனைவரும் ஓட்டமெடுக்க அர்த்தநாரி என்பவர் கல் தடுக்கி கீழே விழுந்தார். எழுந்து பார்த்த போது அது கல் அல்ல; மண்ணில் பாதியளவு புதைந்திருந்த கற்சிலை என்று தெரிந்தது. திரும்பி பார்த்த போது நாகசர்ப்பத்தை காணவில்லை.

ஊரே திரண்டு வந்து கற்சிலையை பெயர்த்தெடுத்தனர். அதில் சிவனும், சக்தியும் காட்சியளித்தனர். இதை ஏரி கரை அருகிலேயே வைத்து எல்லையை காக்கும் எல்லைப் பிடாரியாக வழிபட ஆரம்பித்தனர்.

கேட்ட வரம் கொடுக்கும் சக்தியாக இருந்ததால், காலப்போக்கில் எல்லைப் பிடாரி அம்மன் வெகுவாக பிரசித்தி அடைந்தாள். இன்று பிரமாண்டமாக இக்கோயில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.