Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருநாராயணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு திருநாராயணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருநாராயணர்
  உற்சவர்: செல்வநாராயணர்
  அம்மன்/தாயார்: திருநாராயணி
  தல விருட்சம்: இலந்தை
  தீர்த்தம்: கல்யாணி தீர்த்தம்
  ஊர்: திருநாராயணபுரம்
  மாவட்டம்: மைசூரு
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  பங்குனியில் பிரம்மோற்ஸவம், நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, பங்குனி பூசத்தில் வைர முடிசேவை.  
     
 தல சிறப்பு:
     
  யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதீகம்.  
     
திறக்கும் நேரம்:
    
 நாராயணபுரம்: காலை 8.30- மதியம் 1.30 மணி, மாலை 4- 6 மணி, இரவு7-9 மணி. மேல்கோட்டை மலைக்கோயில்: காலை9.30- மதியம் 2 மணி, மாலை 5- இரவு8 மணி 
   
முகவரி:
   
  அருள்மிகு திருநாராயணர் திருக்கோயில் மேலுக்கோட்டை, திருநாராயணபுரம், மைசூரு, கர்நாடகா.  
   
போன்:
   
  +91 8236-299 839 
    
 பொது தகவல்:
     
  கல்யாணி தீர்த்தத்தில் இருந்து 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டை யோகநரசிம்மர் கோயிலை அடையலாம். இவரிடம், என்ன வேண்டினாலும் ஓர் ஆண்டிற்குள் நிறைவேற்றி வைப்பார். இவரது சன்னதிக்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுகள் உள்ளன. யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதீகம். நரசிம்மரைத் தரிசித்தவர்க்கு கிரகதோஷம் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மலையில் ராமானுஜரின் பாதம் உள்ளது. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்த தீர்த்தத்துக்கு வருவதாக ஐதீகம் என்பதால், அப்போது இங்கு நீராடுவர். தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், லட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  இவரிடம், என்ன வேண்டினாலும் ஓர் ஆண்டிற்குள் நிறைவேற்றி வைப்பார். 
    
நேர்த்திக்கடன்:
    
  நாராயணருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  பத்ரி சென்ற புண்ணியம்: மூலவர் திருநாராயணர் மேற்கு நோக்கி, சங்கு, சக்கரத்துடன் நிற்கிறார். ஒரு கையில் கதாயுதம் உள்ளது. பத்ரி என்னும் இலந்தை மரமே இங்கு தலவிருட்சம். திருநாராயணப் பெருமாளை தரிசித்தவர்கள் பத்ரிநாத் சென்றுவந்த புண்ணியத்தை அடைவர். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரதநந்தினி என்னும் பெண் மூலவரின் பாதத்தில் வீற்றிருக்கிறாள். சாண்டில்ய மகரிஷி இத்தலத்தில் தவமிருந்து பெருமாளை பத்ரிநாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார்.

பேசும் ராமானுஜர்: ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருக்கோஷ்டியூரில் ராமானுஜருக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று, திருநாராயணபுரத்திலும் உண்டு. இங்கு ராமானுஜர் உபதேச முத்திரையுடன் காட்சி தருகிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திசெய்யும் பாவனையில் இருப்பதால் இவரை பேசும் யதிராஜர்(ராமானுஜர்) என்று சொல்கின்றனர். புதர்கள் மண்டிக் காடாக இருந்த இத்தலம், ராமானுஜர் காலத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு, விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னன் பொருளுதவி செய்திருக்கிறான்.

உடையவர் தாலாட்டு: ஜெயந்தி விழாவில் ராமானுஜர், செல்வநாராயணர் விக்ரகத்தை தாலாட்டுவது போல பாவனை செய்து அர்ச்சகர்கள் பாடுவர். இதற்கு உடையவர் தாலாட்டு என்று பெயர். அபிநயத்தோடு பாடும் இத்தாலாட்டு கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பெருமாளின் திருக்கல்யாண வைபவத்தில் திருநாராயணரும், யதுகிரித்தாயாரும் பவனிவரும்போது, ராமானுஜரும் மணமக்களைப் பின்தொடர்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சி, ராமாவதாரத்தில் சீதாராமரைத் தொடர்ந்து வந்த லட்சுமணரைக் குறிப்பதாக உள்ளது. யதுகிரிதாயார் தாமரை மலரைக் கையில் ஏந்தி நிற்கிறாள். உற்சவருக்கு செல்வநாயகி என்பது திருநாமம்.

மலைக்கோட்டை நரசிம்மர்: திருநாராயணபுரத்தில் உள்ள மலைக்கோட்டையில் யோகநரசிம்மர் உள்ளார். மகாவிஷ்ணு பிரகலாதனுக்காக நரசிம்மராக வந்து இரண்யனைக் கொன்றார். தன் தந்தை இறக்க காரணமாக இருந்ததால் பிரகலாதனுக்கு பிதுர்ஹத்ய தோஷம் உண்டானது. அதனைப் போக்குவதற்கு விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு நரசிம்மர் யோகநிலையில் காட்சியளித்தார். அவர் தனக்கு தந்த காட்சியைப் போல் சிலைவடித்த பிரகலாதன், அதை அங்கு பிரதிஷ்டை செய்தார்.
 
     
  தல வரலாறு:
     
  திருநாராயணபுரம் கோயில் உற்சவர் செல்வநாராயணரின் சிலை, ஒரு சமயம் டில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருந்தது. பாதுஷாவின் மகள் நாராயணர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். ராமானுஜர் உற்ஸவரை மீட்க வடநாட்டுக்குப் புறப்பட்டார். இளவரசி அரண்மனையில் இல்லை. பாதுஷாவின் அனுமதியுடன் இளவரசியின் அந்தப்புரத்தில் செல்வநாராயணர் விக்ரஹத்தைக் கண்டார். அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. இதோ! என் செல்வப்பிள்ளை என்று உரக்க அழைத்தார். அந்தச்சிலை சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது. தன் சின்னஞ்சிறு பாதங்களில் சலங்கைகள் ஒலிக்க, ராமானுஜரின் மடியில் வந்து அமர்ந்தார். மீண்டும் விக்ரகமாக மாறிவிட்டார். அதை திருநாராயணபுரம் கோயிலுக்கு கொண்டு வந்தார். அவ்வாறு அவர் திரும்பிய நாளான மாசிகேட்டையன்று டில்லி உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. பாதுஷாவின் மகள் பெருமாளைத் தேடி நாராயணபுரம் வந்துவிட்டாள். செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள். இவள், மூலவரின் பாதத்தில் வரநந்தினி என்ற பெயரில் இருப்பதாக ஐதீகம். நாட்டுப்புறங்களில் வரநந்தினியை பீபிநாச்சியார் என்று குறிப்பிடுவர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதீகம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar