பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 இரவு மணி வரை திறந்திருக்கும்.
கோயிலில் நுழைந்தவுடன் ஒரு சிறிய மண்டபம். அங்கே பக்தர்கள் பரவசத்துடன் பாடும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் இதர பக்திப் பாடல்கள் ஒலித்தவண்ணம் இருக்கிறது.
பிரார்த்தனை
குழந்தைப்பேறு கிடைக்க, விரைவில் திருமணம் நடைபெற, விரைவில் விசா கிடைக்க இங்குள்ள வெங்கடேஸ்வரரை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பிரதட்சிணம் செய்தும், திருமஞ்சனம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இங்கு பெருமாளை 11, 108, 1008 முறை பிரதட்சிணம் செய்வதென்பது முக்கியமான வேண்டுதலாக இருக்கிறது. கோயில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டுடன் ஒரு சிறு அட்டையும் மெல்லிய குச்சியும் விற்கிறார்கள். அதில் 108 அல்லது 1008 கட்டங்கள் உள்ளன. எண்ணிக்கையை எளிதாக்க, ஒவ்வொரு பிரதட்சிணம் வந்த பிறகும் ஒரு கட்டத்தில் துளை போட வேண்டும். இளைஞர் கூட்டம் இப்படிக் கையில் அட்டையை வைத்துக் கொண்டு பிரதட்சிணம் வருவது கண்கொள்ளாக் காட்சி. முதலில் 11 பிரதட்சிணம் செய்து வேண்டுதலை பெருமாளிடம் வைக்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவுடன் 108 அல்லது 1008 முறை பிரதட்சிணத்தை வேண்டிக்கொண்டபடி செய்கிறார்கள். கோயில் நுழைவாயில் மிகவும் சிறியது. சர்வாலங்காரனாய் அபய வரத ஹஸ்தத்துடன் தேவியர்கள் சமேதராகக் காட்சி தருகிறார் பாலாஜி. பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.
கருவறையின் இடப்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதி இருக்கிறது. உள் பிராகாரத்தை விட்டு வெளியில் வந்ததும் கயிலாசநாதர் கோயில் தெரிகிறது. இதுதான் ஆதியில் மாதவரெட்டியின் இடத்தில் இருந்த சிவலிங்கம். இங்கு உண்டியல், தட்சிணை எதுவும் கிடையாது. கற்பூரதட்டு கிடையாது. பக்தர்கள் விரும்பினால் கல்கண்டு வாங்கி இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம். மூட்டை மூட்டையாகக் கல்கண்டும், அன்னதானத்துக்காக அரிசியும் பிராகாரத்தில் கிடக்கின்றன. இந்தக் கோயிலில் பணியாளர்கள் யாருமே கிடையாது. வரிசையாக ஒழுங்குபடுத்துவது தொடங்கி பிரசாதம் தருவதுவரை எல்லாமே பக்தர்கள்தான்!
தல வரலாறு:
சுமார் 500 வருடங்களுக்கு முன்னால் மாதவரெட்டி என்கிற தீவிரமான விஷ்ணு பக்தர் ஒருவர் சில்கூரில் வாழ்ந்து வந்தார். இவர் திராட்சை விவசாயி. ஒவ்வொரு வருடமும் திருமலை திருப்பதிக்குச் சென்று வேங்கடமுடையானை வணங்குவார். வருடங்கள் ஓடின. தள்ளாத முதுமை, நோய் காரணமாக ஒருமுறை அவரால் திருப்பதிக்குச் செல்ல முடியவில்லை. சில்கூரில் இருந்தபடியே இறைவனை எண்ணி எண்ணி இறைஞ்சி அழுதார். உணவு உறக்கமின்றி அவர் படும் அவஸ்தையைப் பார்க்க இறைவனுக்கே பொறுக்கவில்லை. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அவருக்கு கனவில் காட்சியளித்தார். உன் வீட்டுக்கு 500 மீட்டர் தொலைவில், உன் நிலத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதை நீ பார்க்கலாம். அந்த சிவலிங்கம் அமைந்திருக்கும் இடத்துக்கு அருகே ஒரு புற்று காணப்படும். அந்தப் புற்றுக்குள்தான் நான் இருக்கிறேன் என்று தகவல் சொன்னார் வேங்கடவன். உள்ளம் குளிர்ந்த மாதவரெட்டி, எம்பெருமாள் அடையாளம் சொன்ன இடத்துக்கருகில் சென்று கடப்பாரையால் புற்றை வெட்டினார். ஏதோ ஒன்றின் மேல் கடப்பாரை நங்கென பட்டு ரத்தம் பீரிட்டது. அதிர்ச்சி அடைந்த மாதவரெட்டி புற்று மண்ணைக் களைந்து விட்டு உள்ளே பார்க்க... வேங்கடவன் கல் விக்கிரக வடிவமாக அங்கே தரிசனம் தந்தார். மெய்சிலிர்த்துப் போன மாதவரெட்டி, ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா என்று கண்களில் நீர் பனிக்க வணங்கினார். குளிர்ந்த நீரையும், தான் கொண்டு வந்த பாலையும் அபிஷேகமாகப் பொழிந்து வழிபட்டார். பின்னர், அந்த வேங்கடவனுக்குக் கோயிலை, ஏற்படுத்தினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.
இருப்பிடம் : ஐதராபாத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில், ரெங்கா ரெட்டி மாவட்டம் மெஹதிப்பட்டினம் அருகில், சில்கூர் என்ற சிறிய கிராமத்தில்தான் கோயில் உள்ளது. ஒஸ்மான் சாகர் ஏரிக்கு அருகிலுள்ள இந்தத் திருக்கோயிலுக்கு ஐதராபாத்திலிருந்து 15 நிமிடத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி இருக்கிறது. 30 நிமிடத்தில் கோயிலைச் சென்றடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
ஐதராபாத்
அருகிலுள்ள விமான நிலையம் :
ஐதராபாத்
தங்கும் வசதி :
ஐதராபாத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.