Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுந்தரேஸ்வரர்
  அம்மன்/தாயார்: மீனாட்சி
  ஊர்: அரிமளம்
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரையில் நடைபெறும் தெப்பத் திருவிழா  
     
 தல சிறப்பு:
     
  மார்ச் 19ல் இருந்து 21 வரை சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டு பிரகாசிக்கும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அரிமளம், புதுக்கோட்டை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 96294 57337 
    
 பொது தகவல்:
     
  அம்பு பிடிக்கும் பக்தர்கள்: அரிமளத்திலுள்ள பொற்குடை பகுதி மைதானத்துக்கு நவராத்திரி விழாவில் விஜயதசமி அன்று பரிவேட்டைக்காக, மீனாட்சியம்மன், ஸ்ரீநிவாசபெருமாள், அய்யனார், மாரியம்மன், ஜெயவிளங்கி அம்மன், பால் அடையார், சுப்பிரமணியர் ஆகியோர் அம்பு போடுவதற்காக வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏழு சுவாமிகளும் மைதானத்தில் எழுந்தருளியவுடன் தீபாராதனை நடந்து சுவாமிகள் அம்பு போடத் துவங்குகின்றன. இந்த அம்பை வீட்டுக்கு கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர். இதனால் நாம் நினைத்த செயலை அம்பு போல் அடைந்துவிடலாம் என்பது நம்பிக்கை.  
     
 
பிரார்த்தனை
    
  கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில், தீர்த்தம் அமைந்துள்ளது. சித்திரைத் திருவிழாவில் 11ம் திருநாளில் இதில் தெப்பத் திருவிழா நடக்கிறது. கிரகரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது. ஆனால், அவ்வாறு தத்து கொடுக்கும் நபருக்கு வேறு கோயிலில் வேண்டுதல் எதுவும் பாக்கி இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்த நேர்ச்சைகளை நிறைவேற்றிவிட்டு இங்கு வந்து தத்து கொடுக்க வேண்டும். இவ்வகையில், இந்த சுந்தரேஸ்வரர், இறைவனுக்கு கூட கடனைத் தீர்த்தவராகக் கருதப்படுகிறார். சுத்த சாசன கிரயமாக என்னுடைய குழந்தையை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தத்து கொடுக்கிறேன், இனி இது என்னுடைய குழந்தையில்லை. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் குழந்தை, என்று கூறி, கண்ணீர் மல்க பெற்றோர் தங்கள் குழந்தையை அர்ச்சகரிடம் ஒப்படைக்கின்றனர். அர்ச்சகர் அந்தக் குழந்தையை தாய்மாமா அல்லது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கிறார். குழந்தையின் திருமணத்தின் போது பெற்றோர் கோயிலுக்கு மீண்டும் சென்று சுவாமியிடம், என்னுடைய குழந்தையை சுவாமிக்கு தத்து கொடுத்ததாக கூறிய என்னுடைய வாக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி, குழந்தையின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து செல்கின்றனர்.

ஊர் பெயர்க்காரணம்: அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை. முழு நிலவாக இருந்த சந்திரன் தனக்கேற்பட்ட சாபத்தால், குழந்தை போல் சிறுவடிவாகி குறுகி  கொண்டே வந்தார். அனைத்து கலைகளையும் இழந்தார். வில்வமரம் அடர்ந்த பகுதியான அரிமளம் வந்தார். அவரைக் காப்பாற்றும் வகையில், இறைவன் அவரைத் தன் தலைமீது சூடிக் கொண்டார். சாபமும் நீங்கியது. சுந்தரேசப் பெருமானின் திருவருளால், அவருடைய சடைமுடியில் இளம்பிறையாகி (அரிமளமாகி) சந்திரன் அமர்ந்தார். அண்ணலே! தங்கள் திருவருளால் அடியேன் இழந்த கலைகளை இங்கு பெற்றேன், இதனால் இவ்வூர் அரிமளம் என்ற பெயரால் அழைக்க அருள்புரிய வேண்டும், என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமானும் அவ்வாறே அருள்புரிந்ததால் அரிமளம் என்ற பெயர் ஏற்பட்டது. அரும்பள்ளம் என்ற சொல்லே மருவி அரிமளம் என்று ஆயிருக்கலாம் என்றும், இங்குள்ள விளங்கியம்மன் சன்னதியில் ஏரழிஞ்சிப்பழம் என்ற அரிய வகை காணப்பட்டதால் அரும்பழம் என்று பெயர் ஏற்பட்டு அரிமளம் என்று சுருங்கியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சூரிய பூஜை:
மார்ச் 19ல் இருந்து 21 வரை சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டு பிரகாசிக்கும். அப்போது சிறப்புத் தீபாராதனை நடக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  விசுவாவஸூ என்ற கந்தர்வனின் மகள் வித்யாவதி. இவர் அம்பாளின் தீவிர பக்தை. இவள் மீனாட்சியின் அம்சமும், கல்வியின் நாயகியுமான சியாமளாதேவியை தன் மகளாகக் கருதி வழிபட்டு வந்தாள். அவளது பக்தியை மெச்சி காட்சியளித்தாள் சியாமளா. வித்யாவதி அவளிடம், அம்மா! உன்னை மகளாகக் கருதி வழிபட்டேன். உண்மையிலேயே நீ எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும், என்று வேண்டினாள். அவளது வேண்டுதல் அடுத்த பிறப்பில் நிறைவேறும் என அம்பாள் வாக்களித்தாள். அதன்படி வித்யாவதி, சூரசேனன் என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து, மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனை மணந்து கொண்டாள். குழந்தைப்பேறு இல்லாத மன்னன், ஒரு யாகம் நடத்தினான். அதில் அம்பிகை மூன்று வயது சிறுமியாகத் தோன்றினாள். கலைகளை கற்றுத்தேர்ந்த அவளிடம், மதுரையை ஆளும் பொறுப்பைக் மன்னர் கொடுத்தார். மீன், தன் குஞ்சுகளுக்கு கண்களாலேயே உணவு கொடுப்பது போல், தன்னை வேண்டும் பக்தர்களுக்கு கருணைக் கண் பார்வையாலேயே அருள் செய்ததால் இவள் மீனாட்சி என்று பெயர் பெற்றாள். நல்லாட்சி நடத்திய மீனாட்சி, திக்விஜயம் சென்றபோது கயிலாயத்தில் சிவனைக் கண்டாள். அவளை மணக்க, சிவன் மதுரைக்கு வந்தார். திருமணத்திற்கு பின்பு, மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மதுரை மீனாட்சி தங்கள் பகுதியிலும் அருளாட்சி புரிய வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 500 ஆண்டுகளுக்கு முன் பக்தர்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சிறிய அளவில் கட்டப்பட்டது. 66 ஆண்டுகளுக்கு முன் இதை ஓரளவு பெரிய அளவில் கட்டினர்.  
     
சிறப்பம்சம்:
     
  விஞ்ஞானம் அடிப்படையில்: மார்ச் 19ல் இருந்து 21 வரை சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டு பிரகாசிக்கும்.  
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.