Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வேங்கடாசலபதி
  தல விருட்சம்: புளியமரம்
  தீர்த்தம்: கிணறு
  ஊர்: மானுபட்டி
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி பிரம்மோற்சவம், மார்கழி பிரம்மோற்சவம்  
     
 தல சிறப்பு:
     
  பக்தர்களே தயாரிக்கும் நிவேதனத்தை பெருமாளுக்குப் படைப்பது இத்தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில் மானுபட்டி, திருப்பூர்.  
   
    
 பொது தகவல்:
     
 

மற்ற கோயில்களுக்கு போவதைப் போல், நினைத்தால் உடனே அங்கு செல்ல முடியாது. புலிகள் நடமாடும் இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடு. எனவே அவர்களின் அனுமதியுடன் சென்று மாலை 5.30 மணிக்குள் வனத்தை விட்டு வெளியேறவிட வேண்டும். பிரதி சனிக்கிழமை மற்றும் மார்கழி மாதம் முழுவதும் கோயில் திறந்திருக்கும் மற்ற நாட்களில் வழிபாடுகள் கிடையாது. மலைமீது எந்த வசதியும் மின்சாரமும் இல்லாத நிலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பிரதான கோயிலின் எதிரே கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். அதன் அருகே தீபஸ்தம்பம் உள்ளது. இதன் முன்பு தாசர்கள் அமர்ந்து பெருமாளை போற்றிப் பாடி சேவிப்பர். கோயிலின் இடதுபுறம் வேணுகோபால சுவாமியின் தனி சன்னிதி உள்ளது.

 
     
 
பிரார்த்தனை
    
  நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைளுக்கு குணமடைய இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நீங்கியதும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், நோய் நீங்கியவுடன் பிறக்கும் முதல் கன்றை இக்கோயிலுக்கு நேர்ந்து விடுவது வழக்கமாக உள்ளது. அப்படி நேர்ந்துவிட பட்ட கால்நடைகள் பெரும் அளவில் கோயிலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 
    
 தலபெருமை:
     
 

இத்தலத்தை தென் திருப்பதி என அழைக்கின்றனர். திருப்பதிக்கும் இத்தலத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இத்தலத்தின் தலவிருட்சம் புளியமரம். ஏழு சிறிய குன்றுகளைக் கடந்துதான் கோயிலை அடைய வேண்டும். அரப்பு தயாரிக்கப் பயன்படும் இலைகளைக் கொண்ட ஊஞ்ச மரங்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.

இத்தலத்தில் சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுவது அவல் பிரசாதமாகும். அவல் துருவிய தேங்காய், கரும்புச் சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றை கலந்து பக்தர்களே தயாரிக்கும் நிவேதனத்தை பெருமாளுக்குப் படைப்பது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். தேங்காய்களைத் துருவ கோயிலேயே உபகரணங்களை வைத்துள்ளனர். பசுமையான வனச் சூழலில் பச்சைமாமலை போல் மேனியரான பெருமாளை மலர் அலங்காரக் கோலத்தில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
 
புரட்டாசி 5-வது சனிக்கிழமையன்று  பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறகிறது. காலையில் முதல் பூஜையின் போது பந்த சேவை எடுத்து சங்கநாதத்துடன் ஆராதனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் பின் கருட வாகனத்தில் உற்சவராக ஸ்ரீநிவாசப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி சென்று திருவீதி உலா வருவார். ஐந்தாவது சனிக்கிழமை பூஜைகள் அனைத்தும் உபயதாரர் பங்களிப்புடன் நடைபெறுகிறது. கோயிலின் அருகே என்றுமே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்றுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரிசி, பருப்பு போன்ற தானியங்களை காணிக்கையாக வழங்குகின்றனர். தாசர்களுக்கு செய்யும் இச்செயல் பெருமாளுக்கே செய்யும் சேவை என்பது பக்தர்களின் நம்பிக்கை!

 
     
  தல வரலாறு:
     
  ஒரு சமயம் திருப்பதியில் உறையும் கோவிந்தராஜப் பெருமாள் சனி நீராட அரப்பைத் தேடி இந்த வனப்பகுதிக்கு வந்து சென்றதாகச் சொல்கிறார்கள். அன்று அவர் வந்திருந்த இடத்தில் இன்று வேங்கடாசலபதி பெருமாள் வீற்றிருந்து பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள்பாலித்து வருகின்றார். வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்களான பாளையப்பட்டு எத்திலப்பன் வம்சத்தார் கோயிலை ஏற்படுத்தி நிர்வாகம் செய்து வந்தனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பக்தர்களே தயாரிக்கும் நிவேதனத்தை பெருமாளுக்குப் படைப்பது இத்தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.