Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தர்மசாஸ்தா
  அம்மன்/தாயார்: மஞ்சமாதா
  ஊர்: ராங்கியம் மெட்டு
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சபரிமலையைப் போல் 10 நாள் மண்டலபூஜை, ஆனி அனுஷம் வருடாபிஷேகம்,சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி பூஜை, மகரஜோதி, சித்திரை விஷு, பங்குனி உத்திரம், ஆங்கில வருடப்பிறப்பு, நவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு ஐயப்பன் தகதகவென ஜொலிப்பது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
  காலை 6.30 மணி முதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் ராங்கியம் மெட்டு, மிதிலைப்பட்டி போஸ்ட் -622 409 புதுக்கோட்டை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 96266 86269, 93441 06384 
    
 பொது தகவல்:
     
  இங்கு கன்னிமூலகணபதி, பாலதண்டாயுதபாணி, பிரதோஷ சிவன், உற்சவர் ஐயப்பன் ஆகிய மூர்த்திகள் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலஸ்தானத்தின் வெளியே துவாரபாலகர்களும், மகா மண்டபத்தில் கருப்பணசாமியும் உள்ளனர். சபரிமலையை போலவே ஐயப்பனுக்கு எதிரில் 18 படிகள் உள்ளன.  கோயில் சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், நாகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, தன்வந்திரி, மஞ்சமாதா ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். நாள்தோறும் இக்கோயிலில் இரண்டு கால பூஜை நடத்தப்படுகிறது.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வி மற்றும் தொழிலில் சிறக்கவும், நோய் குணமாகவும்  இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், பாயாசம் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அந்த தெய்வமே குழந்தை வடிவில் சிரித்த முகத்துடன் பாலசாஸ்தாவாக இங்கு விளங்குகிறார். இவருக்கு வலது கன்னத்தில் குழந்தைகளுக்கு திருஷ்டி வைப்பது போன்ற அமைப்புடன் இயற்கையாகவே யோக மச்சம் அமைந்திருப்பது சிறப்பு. இந்த மச்சத்தை அபிஷேக காலங்களில் தரிசிக்கலாம். இதனாலேயே இப்பகுதி மக்கள் இவரை மச்சக்கார ஐயப்பன் என்றழைக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பாலசாஸ்தாவுக்கு பாயாசம் படைத்து வேண்டி செல்கின்றனர். அதே போல் கல்வியில் சிறந்து விளங்க அநேக குழந்தைகள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். ஐயப்பன் குழந்தை வடிவில் விளங்குவதால் இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்கு வந்து வழிபாடு செய்த பின் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


சபரிமலையைப் போலவே மண்டலபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் அனைவரும் சபரிமலை செல்வதற்காக இங்குவந்து மாலை அணிந்து விரதமிருந்து இருமுடிகட்டி செல்கின்றனர். மகர ஜோதி அன்று இங்கும் கோயில் எதிரில் ஜோதி காட்டப்படுவது சிறப்பு. ஆண்டு தோறும் ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் நடைபெறும் வருஷாபிஷேகத்தின் போது, சுவாமி புறப்பாடுடன் திருவிழா  சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது,  மகா அன்னதானம் நடக்கிறது.


திருமண தடையுள்ள  பெண்கள் வடக்கு பார்த்து நின்ற கோலத்தில் உள்ள மாளிகைப்புறத்தம்மனுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத் துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள். இதனால் விரைவில் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிககை.


நோய்தீர்க்கும் கடவுளான தன்வந்திரிக்கு தமிழகத்தில் தனி சன்னதி அமைந்திருப்பது குறைவு. இங்கு தன்வந்திரி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிப்பதால் அநேக பக்தர்கள் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தினருக்கோ ஏதேனும் நோய் இருந்தால் இங்குள்ள தன்வந்திரியை வழிபட்டு சிறந்த பலன் அடைகின்றனர்.  தன்வந்திரி பகவானுக்கு புதன் கிழமைகளில் சந்தனாதி தைலம் மற்றும் வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நாள்பட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. அத்துடன் வெப்பு நோய் உள்ளவர்கள் இவரை ஞாயிற்று கிழமைகளிலும், மூளை சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் திங்கள் கிழமைகளிலும், தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளிலும், நீர் மற்றும் நினைவாற்றல் சம்பந்தமாக புதன் கிழமைகளிலும், வயிறு சம்பந்தமாக நோய்களுக்கு வியாழக்கிழமைகளிலும், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு வெள்ளி கிழமைகளிலும், இடுப்பு சம்பந்தமான நோய்களுக்கு சனிக்கிழமைகளிலும் தன்வந்திரியை வழிபடுவது சிறந்த பலனை தரும்.
 
இது ஐயப்பன் கோயிலாக இருந்தாலும், விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி, முருகனுக்குரிய சஷ்டி, சிவனுக்குரிய பிரதோஷம், அம்மனுக்குரிய நவராத்திரி, பெருமாளுக்குரிய மார்கழி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


கோயில் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர், காசியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமாகும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. 


கோயிலில் ஐயப்பனுக்கு எதிரில் குருவாயூரில் இருப்பது போன்று மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது. கல்லினால் ஆன இந்த தீபஸ்தம்பம் குருவாயூரில் இருந்தே வரவழைக்கப்பட்டது. திருவிழாக்காலங்களில் இந்த தீபஸ்தம்பத்தில் ஏற்றப்படும் தீபத்தை காண கண்கோடி வேண்டும்.


 
     
  தல வரலாறு:
     
 

நெடுங்காலமாக புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தங்கள் பகுதியில் ஐயப்பன் கோயில் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே இருந்து வந்தது.  இந்த குறையை போக்குவதற்காகவும், சபரிமலையை போலவே இங்கும் விழாக்கள் நடத்தவும் இங்கு கோயில் கட்டியதாக கூறப்படுகிறது.


சபரிமலையை போன்றே இந்த கோயிலிலும் மூலஸ்தானத்தின் மேல் தோற்றம் அமைந்துள்ளது.  விரைவில் இங்கு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஆதிசங்கரின் ஷன்மத முறைப்படி இந்த ஊரில் விநாயகர், முருகன், சிவன், அம்மன், பெருமாள் ஆகியோருக்கு தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் படுவது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.