Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு ஓதனேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஓதனேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஓதனேஸ்வரர்
  அம்மன்/தாயார்: அன்னபூரணி
  ஊர்: இடமணல்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அன்னாபிஷேகம், பிரதோஷம், சிவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  மூலவரின் திருமேனி பெரிய அளவில் அமைந்துள்ளது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் மணி 12 வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஓதனேஸ்வரர் திருக்கோயில், இடமணல், சீர்காழி, கடலூர்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்குள்ள மண்டபத்தின் வலது புறம் முருகனும் இடதுபுறம் பிள்ளையாரும் அருள் பாலிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  காணாமல் போன பொருட்களையும், இழந்த சொத்துகளையும் மீட்டுத் தரும் அருட்குணம் கொண்டவர் இந்த ஓதனேஸ்வரர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும். நந்தி பீடத்தை அடுத்து சிறிய மகா மண்டபம் உள்ளது. அதன் வலது புறம் அன்னை அன்னபூரணி நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அமைந்திருக்கிறாள். மண்டபத்தின் வலது புறம் முருகனும் இடதுபுறம் பிள்ளையாரும் அருள்பாலிக்கிறார். கருவறையில் இறைவன் ஓதனேஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ் திசை நோக்கி தரிசனமளிக்கிறார். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் போன்று இங்கு இறைவனின் திருமேனி மிகப் பெரிய அளவில் அமைந்திருப்பதைக் கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியாது!  
     
  தல வரலாறு:
     
  காவிரியின் வடபால் கடற்கரை பக்கம் உள்ள சிவாலயங்களை சுந்தரரும் அவரது சீடர்களும் தரிசித்து வந்து கொண்டிருந்தனர். பூம்புகாரை தரிசித்து விட்டு திருமுல்லைவாயிலை நோக்கி அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். வழியெல்லாம் காட்டுப்பகுதி, கரடு முரடான பாதை. வடகால் என்ற ஊருக்கு அவர்கள் வந்தபோது நல்ல பசி, கையில் உணவில்லை. அருகில் வீடுகள் ஏதும் இல்லை. கந்தரரும் அவரது சீடர்களும் பசி மயக்கத்தில் ஒரு மரத்தினடியில் அமர்ந்தனர். இறைவா! உன்னை தரிசிக்க வந்த எங்களுக்கு ஏன் இந்த சோதனை? என்று புலம்பியபடியே மயக்கமானார் சுந்தரர். சற்று நேரத்தில் யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்த சுந்தரர், எதிரே ஓர் அந்தணர் கையில் கட்டுச் சோற்று மூட்டையுடன் இருப்பதைக் கண்டார். வாருங்கள் உணவருந்த என்றழைத்த அவர், அனைவரையும் அமரவைத்து உணவைப் பரிமாறினார். அனைவரும் உண்டு மகிழ்ந்த போது, எங்கள் பசியைப் போக்கிய உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வது? என்று சுந்தரர் கேட்க, பதிலுக்கு நகைத்த அவர் உடன் மறைந்து போனார். திகைத்தார் சுந்தரர். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. சுந்தரரே! என் தந்தையின் நினைவாக பத்து சிவாலயங்களைக் கட்டுங்கள் என்று அந்த அசரீரி கூற, சுந்தரரும் அவரது சீடர்களுக்கும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி. அசரீரியாக கேட்டது விநாயகர் வாக்கு... என்பதை உணர்ந்த சுந்தரர், அப்படியே பத்து சிவலாயங்களைக் கட்டினார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவரின் திருமேனி பெரிய அளவில் அமைந்துள்ளது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.