Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜப்பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி, கஜலட்சுமி
  ஊர்: நல்லாத்தூர்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  போகிப் பண்டிகை, வைகுண்ட ஏகாதசி,ராமநவமி  
     
 தல சிறப்பு:
     
  உடலில் எட்டு நாகங்களோடு கருடாழ்வார் காட்சி தருவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு திரிபங்கி ராமர், விநய ஆஞ்சநேயர், திருமங்கை ஆழ்வார், வேதாந்த தேசிகர், பெருந்தேவி தாயார், கஜலட்சுமி, கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண பாக்கியம் கிடைக்க பெருமாளையும், கல்வியில் சிறந்து விளங்க கருடாழ்வாரையும் வேண்டிக் கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றியும், கருடாழ்வாருக்கு 8 முறை பிரதட்சணம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள ஆதிலக்ஷ்மி நாராயண பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்தமண்டபத்தில் திரிபங்கி ராமரும், அவருக்கு அருகே இடது கையில் ராமரின் சூரியவம்சக் கொடியை ஏந்தியும், வலது கையால் வாய் மூடி பணிவாகவும் இருக்கிறார் விநய ஆஞ்சநேயர். அருகில் திருமங்கை ஆழ்வாரும், வேதாந்த தேசிகரும் சேவை சாதிக்கின்றனர். மேலும் இங்கு பெருந்தேவி தாயாரும், கஜலட்சுமியும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதி உள்ளது. உடலில் எட்டு நாகங்களோடு கருடாழ்வார் காட்சி தருகிறார். இவருக்கு சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்து, 8முறை பிரதட்சணம் செய்தால் சிறந்த கல்வியும், செழிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் சீதா கல்யாணத்தின் போது, இக்கோயிலுக்கு வந்து ராமர்-சீதை காப்புக்கயிறு கட்டிச் செல்பவர்களுக்கு உடனே திருமண பாக்கியம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திய இந்தக் கோயில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலுக்கு அருகே சிங்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலும், மேற்கில் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலும் அமைந்து இத்தலத்தை மேலும் சிறப்பிக்கின்றன.  
     
  தல வரலாறு:
     
  காஞ்சியில் பெரிய ஆலயம் கொண்டு, வரம் தருவதே எமது வாடிக்கை; அது தவிர வேறொன்றும் அறியேன் என்று சொல்லி அமர்ந்தார் வரதாஜப் பெருமான். தான் வருவதற்கு முன்னரே தனது அம்ச மூர்த்தியை பல்வேறு தலங்களில் நிலைநிறுத்திக் கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருந்தது. அவற்றில் ஒன்றாக நல்லாத்தூரிலும் ஆட்சி கொண்டார். ராவணனை வீழ்த்திய பின் பாரத தேசத்தின் அனைத்து மக்களையும் காண்பதற்காக, சிறு கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை சீதாப்பிராட்டியோடு ராமர் திருவலம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தார். மக்கள் அனைவரும் ராமநாமம் சொல்லி அவரை வரவேற்றனர். தங்களின் திருப்பாதங்களைப் பதித்து விட்டு செல்லுங்கள். அனுதினமும் அதைப் பூஜித்து ஆனந்தமடைவோம் என அன்புடன் கேட்டுக் கொண்டனர். ராமரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: உடலில் எட்டு நாகங்களோடு கருடாழ்வார் காட்சி தருவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar