Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு மங்களாம்பிகை திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மங்களாம்பிகை திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மங்களாம்பிகை
  ஊர்: போலார்
  மாவட்டம்: மங்களூரு
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  மாசியில் ஐந்து நாள் விழா, நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகை லட்ச தீபம், மே மாதம் வசந்த பூஜை.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் மங்களாம்பிகையை சாதாரணமாக பார்த்தால் லிங்கவடிவமாக இருப்பதுபோல் தெரியாது. காலையில் நிர்மால்ய தரிசனத்தின் போது மட்டுமே, லிங்க வடிவம் தெரியும். ஆனால், இந்த சக்திலிங்கம், ஒரு பெண்ணின் வடிவம் போல, சற்று வித்தியாசமாக இருக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு மங்களாம்பிகை திருக்கோயில் போலார், மங்களூரு.  
   
போன்:
   
  +91 0824- 242 5476. 
    
 பொது தகவல்:
     
  கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள அரச மரத்தடியில் நாகராஜா சந்நிதி உள்ளது. இங்கு சிறிய பாம்பு சிலை உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  கண்நோய், தோல் வியாதி விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க அம்பாளை வழிபடுவர், ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இவளது சந்நிதியில் கல்வியில் மேம்பட வித்யாரம்ப வழிபாடு நடக்கிறது. துலாபாரமும் எடுக்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  நாகதோஷ வழிபாடு: கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள அரச மரத்தடியில் நாகராஜா சந்நிதி உள்ளது. இங்கு சிறிய பாம்பு சிலை உள்ளது. இதற்கு பால், இளநீர் அபிஷேகம் செய்தால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது. ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு நிவாரணம்பெறலாம். இங்கு தரப்படும் விபூதியை தரித்தால் பால பீடை எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகுமென்ற நம்பிக்கை உள்ளது.

தீர்த்தத்தில் தென்னங்கன்று: விவசாயிகள் தென்னங்கன்று நடுவதற்கு முன்பாக ஒருநாள் முழுவதும் இங்குள்ள நிர்மால்ய தீர்த்த தொட்டியில் தென்னங் கன்றுகளை வைக்கின்றனர். மறுநாள், அதனை நடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தேங்காய் விளைச்சல் நன்றாக இருக்குமென்ற நம்பிக்கையுள்ளது.

லட்சுமி மாங்கல்ய பூஜை: மங்களாதேவி சந்நிதி எதிரிலுள்ள வசந்த மண்டபத்தில் தினமும் லட்சுமி மாங்கல்ய பூஜை நடத்தப் படுகிறது. அம்மனின் சிரசு வைக்கப்பட்டுள்ள சந்நிதியில் செவ்வந்தி மாலை சாத்தி வழிபடுவதால் ஆரோக்கிய வாழ்வு கிடைக்கிறது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யம், குழந்தைபாக்கியம் கிடைக்கிறது. எதிரிகள் செயலிழந்து போவார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  துளுநாட்டை சுற்றியுள்ள 21 ராஜ்யங்களை ஆண்ட அந்தகாசுரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். இவனை அழித்து, உலகை காக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் அவர்கள் வேண்டிக் கொண்டனர். இதற்காக பரசுராம அவதாரம் எடுத்த விஷ்ணு, அந்தகாசுரனை அழித்து, அவனது ராஜ்யங்களை கஷ்யப முனிவரிடம் ஒப்படைத்தார். பின், தனக்கு தவம் செய்ய ஒரு சிறந்த இடத்தை காட்டும்படி சிவ பெருமானிடம் வேண்டி  கொண்டார். சிவபெருமானும், உனக்கு உகந்த இடத்தை கடல் அரசனிடம் கேட்டு பெற்றுக் கொள், என்றார். கடல் அரசன் பரசுராமருக்கு இடம் தர மறுத்தான். கோபம் அடைந்த பரசுராமர், தன் கோடரியை கடல் அரசனை நோக்கி வீசினார். நேத்திரவதி ஆறும், பல்குனி ஆறும் இணையும் இடத்தில் கோடரி விழுந்தது. அந்த இடத்திலிருந்து கடல் உள்வாங்கி சென்றது. அந்த இடத்தில், அம்மன் வடிவம் பொறித்த சிவசக்தி லிங்கம் கிடைத்தது. இதுதான் தவம் செய்ய சரியான இடம் என்று பரசுராமர் அந்த இடத்தைத் தேர்வு செய்தார். சக்திலிங்கத்திற்கு கோயில் கட்டி மங்களாதேவி என்ற பெயர் சூட்டினார். அம்பாள் பெயரில், மங்களாபுரம் என்று ஏற்பட்ட பெயர் மருவி மங்களூரு ஆனது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட வீரபாகு மன்னரின் வாரிசுகள் கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் மங்களாம்பிகையை சாதாரணமாக பார்த்தால் லிங்கவடிவமாக இருப்பதுபோல் தெரியாது. காலையில் நிர்மால்ய தரிசனத்தின் போது மட்டுமே, லிங்க வடிவம் தெரியும். ஆனால், இந்த சக்திலிங்கம், ஒரு பெண்ணின் வடிவம் போல, சற்று வித்தியாசமாக இருக்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.