Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மஞ்சுநாதர்
  ஊர்: கத்ரி
  மாவட்டம்: மங்களூரு
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி, மங்களூர் மாவட்டம் கர்நாடகா மாநிலம்.  
   
    
 பொது தகவல்:
     
  10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், 14-ஆம் நூற்றாண்டில் கருங்கல் கோயிலாக அமைக்கப்பட்டது. தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுகின்றனர். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், சொட்டுத் தண்ணீர்கூட விக்கிரகத்தின்மீது நிற்காமல் வழிந்தோடிவிடும். மகாவிஷ்ணு, கணேஷ், தேவிதுர்கை, ஐயப்பன், வேதவியாஸர், கோமுக கணபதி ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  மஞ்சுநாதருக்கு ருத்ர அபிஷேகம், சதுர் ருத்ர அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், எல்லாக் கஷ்டங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள மஞ்சுநாதருக்கு அபிஷேகம், வில்வ அர்ச்சனை செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயிலின் தெற்குப் பகுதியில், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் மத்ஸ்யேந்திரநாதர், மடித்த கால்களுக்கு மேல் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து அற்புதமாகக் காட்சி தருகிறார். கிரீடமும் காதணியும் தவிர, வேறு ஆபரணங்கள் இல்லை இவருக்கு. அதேபோல், வடக்குப் பகுதியில், ஏராளமான ஆபரணங்களுடன் பத்மாசனக் கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார் சௌரங்கிநாதர். கத்ரி மஞ்சுநாதர் ஆலயம், சதுர அமைப்பில், பிரமிட் வடிவக் கூரையுடன் அமைந்துள்ளது. இங்கே, ஏழு தீர்த்தங்கள்; அருகில் நீரூற்றும் உண்டு. மலையுச்சியில் பாண்டவர் குகைகளும் இருக்கின்றன. இங்கே, கி.பி. 968ஆம் ஆண்டில், மன்னர் குந்தவர்ம பூபேந்திரன் காலத்தில் உருவாக்கப்பட்ட திரிலோகேஸ்வரர் திருவிக்கிரகம் உள்ளது. பத்மாசனக் கோலத்தில் காட்சி தருகிறார் திரிலோகேஸ்வரர். பஞ்ச உலோகத்தாலான இந்த விக்கிரகம், மிகப் பழைமை வாய்ந்தது என்கின்றனர். ஆறு கரங்களும் மூன்று திரு முகங்களும் கொண்டு அற்புதமாகத் திகழும் விக்கிரகம், கதரிகா விஹாரையில் நிறுவப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. விஹாரை என்பது புத்த மதம் பயன்படுத்திய சொல். கத்ரியில் 10ஆம் நூற்றாண்டு வரை புத்த மதம் தழைத்திருந்தது. ஒருகாலத்தில் வாழை வனமாக இந்தப் பகுதி விளங்கியதால், கதலி என வழங்கப்பட்டு, பிறகு கத்ரி எனும் பெயர் பெற்றதாம். விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுகளில் கதலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் பின்புறம், ஏழு தீர்த்தக் குளங்கள் உள்ளன. அருகில் நீரூற்று. இதற்கு கோமுகம் என்று பெயர். பக்தர்கள் இங்கு வந்து கை, கால், முகம் கழுவிய பின்னரே கோயிலின் உள்ளே செல்கிறார்கள். கோயில் நுழைவாயிலில் மிக உயரமான தீபஸ்தம்பம் உள்ளது. உத்ஸவத்தின் போது, இதில் ஏராளமான தீபங்கள் ஏற்றப்படுமாம் ! இங்கே, லட்ச தீப உற்ஸவம் விமரிசையாக நடைபெறும். கோயிலுக்கு வந்து, தங்களின் குறைகளை முறையிடுவோருக்கு, சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தருள்கிறார் மஞ்சுநாதர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.  
     
  தல வரலாறு:
     
  காச்யப முனிவரிடம் க்ஷத்திரியர்கள் மரியாதை காட்டினார்கள்; அவருக்கு நிலங்கள் பலவற்றை தானம் அளித்தார்கள். அதேநேரம், சஹ்யாத்ரியில் வசித்து வந்த பரசு ராமருக்கு, க்ஷத்திரியர்கள்மீது கடும் கோபம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட க்ஷத்திரியர்களைக் கொன்றார். பிறகு அவர், சிவனாரை நோக்கித் தவமிருந்தார். கத்ரி சேத்திரம் சென்று தவம் இருக்கும்படியும், அங்கே மஞ்சுநாதராக தான் இருப்பதாகவும் சிவனார் சொல்ல... பரசுராமர் கத்ரி சென்று தவம் மேற் கொண்டார். அங்கே அவருக்கு, பார்வதிதேவியுடன் காட்சி தந்தருளினார் சிவனார், இன்றளவும், பரசுராமர் கத்ரி தலத்தில் தவம் இருப்பதாக ஐதீகம்!
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar