Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பெரிய மாரியம்மன்
  உற்சவர்: மாரியம்மன்
  அம்மன்/தாயார்: மாரியம்மன்
  தல விருட்சம்: இத்திர மரமும், மலைவேம்பும்
  ஊர்: ராமநாதபுரம்
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ரா பவுர்ணமி, ஆடி, தை வெள்ளிக்கிழமைகள், ஆடிமாத கடைசி வெள்ளியில் வளைகாப்பு உற்சவம், நவராத்திரி, தனுர் மாத பூஜை எனப் பல்வேறு உற்சவங்கள் சிறப்பிக்கப்பட்டாலும் பங்குனியில் நடைபெறும் பூக்குழி உற்சவமே பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  துர்க்கை அம்மன், சந்தன மாரியம்மன், ராக்காச்சி அம்மன், குறத்தி அம்மன், விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி, பதினெட்டாம்படி கருப்பன், காலபைரவர் எனப் பல்வேறு தெய்வத்திருவுருவங்களும்; புற்றுக்கோயிலும்; மன்னர் கிழவன் சேதுபதி சிலையும் கோயிலில் இடம்பெற்றுள்ளன. இத்திர மரமும், மலைவேம்பும் தல விருட்சங்கள் இங்கு சிறப்புப் பெற்றவையாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், ராமநாதபுரம்-623501  
   
போன்:
   
  +91 - 9787495689 
    
 பொது தகவல்:
     
  திருமணத்தின்போது அக்னியை சாட்சியாக வைத்து ஓர் ஆண், ஒரு பெண்ணை மனைவியாக்கிக் கொள்கிறான். அதனால் பெண்கள் நெருப்பை காலால் மிதிக்கக்கூடாது என்ற ஐதிகம். இங்கு ஆண்டான்டு காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. விழாவில் ஆண் பக்தர்கள் முதலில் தீமிதிக்க, அதன் பின்னர் அந்த பதைபதைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. பூக்குழி இறங்கிய பக்தர்கள் சிலர், எரிந்துகொண்டிருக்கும் நெருப்புத் துண்டங்களை மண்வெட்டி போன்ற கருவியால் வாரியெடுத்து, விரதமிருந்த பெண் பக்தைகளின் தலையில் கொட்டுகிறார்கள். இப்படி மூன்று முறை அக்னி அவர்கள் தலையில் கொட்டப்படுகிறது. பக்தைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாததற்கு அம்மனின் அருளேயன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்! என்று பக்தர்கள் கூறுகின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  தாலிபாக்யம் நிலைக்க, குழந்தைப்பேறு கிட்ட, குடும்பப் பிரச்னை தீர, கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட எனப் பல்வேறு காரணங்களுக்காக  மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்கிறார்கள் பக்தர்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  காப்புக் கட்டி, குறிப்பிட்ட நாட்கள் விரதமிருந்து, தகதகவென எரிந்து கொண்டிருக்கும் நெருப்புத் துண்டங்களின் மேல் பக்தர்கள் நடந்துசெல்லும் அந்தத் தருணம் பார்ப்போரையும் பரவசமடையச் செய்யும்! இறைநினைவோடு இருப்பவர்களுக்கு பூவும், தீயும் ஒன்றாகத்தான் தெரியும். அதனால்தான் தீமிதித்தலை பூமிதித்தல் என்றும் அழைக்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  பதினாறு கால் மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயில். மகா மண்டபம், அர்த்தமண்டபம் கடந்து கருவறையில் மாரியம்மன் சாந்தசொரூபியாகத் திகழ்கிறாள். அம்மைநோய் உட்பட அனைத்து நோய்கள் விலகவும், அனைத்து பேறுகள் கிட்டவும் இந்த அன்னை அருள்புரிகிறாள்.
 
     
  தல வரலாறு:
     
  ராமநாதபுர சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னர்களுள் ஒருவர், கிழவன் சேதுபதி. ஒரு சமயம், நீண்டகாலமாக தொல்லைக் கொடுத்து வந்த மைசூர் மன்னன் மேல் படையெடுத்து, வெற்றிவாகை சூடி, மதுரையைத் தாண்டி இந்தப் பக்கம் வரக்கூடாது! என அவனை எச்சரித்து, கைப் பற்றிய நாட்டை அவனிடமே கொடுத்துவிட்டு நாடு திரும்புகிறார், கிழவன் சேதுபதி. இந்நிலையில் அம்மை நோயால் அவர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார். பலரது ஆலோசனையின் படி, அல்லிக் குளம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இப்பகுதியில் எழுந்தருளியிருந்த மாரியம்மனை நோய் குணமாக, அம்மனுக்கு ஓர் கோயிலை ஏற்படுத்துகிறார். இப்படிப் பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கப்பட்ட கோயில், இன்று பெரிய மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்திர மரமும், மலைவேம்பும் தல விருட்சங்கள் இங்கு சிறப்புப் பெற்றவையாகும்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.