|
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கோதண்டராமர் |
|
உற்சவர் | : |
ராமர், ஆஞ்சநேயர் |
|
ஆகமம்/பூஜை | : |
வைகானஸம் |
|
ஊர் | : |
ராமநாதபுரம் |
|
மாவட்டம் | : |
ராமநாதபுரம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
ஆனி 10 நாள் பிரமோற்சவ திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர
விஜயதசமி, வைகுண்டஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
ஒரே கோயிலுக்குள் சிவன் மற்றும் பெருமாளுக்கு தனித்தனி சன்னதி அமைந்திருப்பதும், மூலஸ்தானத்தில் அனுமன் நின்ற கோலத்தில் ராமரை வணங்கிய நிலையில் இருப்பதும் சிறப்பு. ராஜகோபுரத்தின் கீழ் பெரிய திருவடியான கருடாழ்வாரும், சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் துவாரபாலகர் வடிவில் அருள்பாலிப்பது மேலும் சிறப்பு. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,
ராணி சத்திர தெரு,
ராமநாதபுரம்.623501 |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்தில் மூன்று கலசங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்த கோயில். ராஜகோபுரத்தை அடுத்து கொடிமரம், பலிபீடம், தீர்த்தக்கிணறு ஆகியவை அமைந்துள்ளது. கொடிமரம் தாண்டியவுடன் தனி சன்னதியில் மூலவரை பார்த்த நிலையில் நின்ற கோலத்தில் கருடன் அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
அனைத்து விதமான பிரார்த்தனைகள் நிறைவேற, வேண்டியது கிடைக்க பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக புது வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
மூலஸ்தானத்தில் சீதை,லட்சுமணருடன் ராமர் கையில் வில்லேந்திய நிலையில் நின்ற கோலத்தில் கோதண்டராமராக அருள்பாலிக்கிறார். ஆழ்வார்கள் தனி சன்னதியிலும், ஜெய வீர ஆஞ்சநேயர் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். சக்கரத்தாழ்வார் மற்றும் நரசிம்மருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் விமானத்தில் தசவதார நிகழ்ச்சிகளை விளக்கும் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதிக்கு பின்புறம் ராமர் பாதம் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்டது. |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
ராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்டாள். சீதையை மீட்க ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சமுத்திரத்தைக் கடந்தாக வேண்டும். அதன்பொருட்டு ராமர் கடலரசனை வேண்டிக்கொள்கிறார். இதன் காரணமாகத்தான் ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலத்தில் ராமர் தர்ப்பையால் ஆன படுக்கையில் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் திருப்புல்லாணி சயன ராமர் மீது கொண்ட அபிமானத்தினால், ராமநாதபுரத்திலும் ஒரு கோயில் கட்ட நினைத்து இந்த கோதண்ட ராமர் கோயில் கட்டி வழிபாடு செய்தார்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
ஒரே கோயிலுக்குள் சிவன் மற்றும் பெருமாளுக்கு தனித்தனி சன்னதி அமைந்திருப்பதும், மூலஸ்தானத்தில் அனுமன் நின்ற கோலத்தில் ராமரை வணங்கியநிலையில் இருப்பதும் சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|