Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு அரிக்கேசவ வழிவிட்ட அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அரிக்கேசவ வழிவிட்ட அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அரிக்கேசவ வழிவிட்ட அய்யனார்
  அம்மன்/தாயார்: பூரண புஷ்கலா தேவி, மாவிரட்சி அம்மன், அரக்காசு அம்மன்
  தல விருட்சம்: புளியமரம், ஆலமரம்
  தீர்த்தம்: உறை கிணறு
  புராண பெயர்: கமுதை வழிவிட்டனேந்தல் அய்யனார்குளம்
  ஊர்: கமுதி
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாசி மாத மஹா சிவராத்திரி, பாரிவேட்டை, பாரிவேட்டை மறுநாள் முதல் பிறையன்று சமண மகா மாமுனிவர், மாசான காளிக்கு (மயான காளி) கருங்கிடாய் வெட்டி பலியிட்டு விருந்து. புரட்டாசி மாத மாகாளயா பட்சம், தைப்பொங்கல், பங்குனி உத்திரம், அய்யனார் பிறந்த நாள் விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  அய்யனார் கோயிலுக்கு வலது புறத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வலது புறம் முறுக்கி திருகியுள்ள இடத்தில் கருப்பணசாமி உள்ளார். வலது புறமாக திரும்பு முறுக்கியுள்ள புளிய மரத்தில் அமர்ந்துள்ளதால் வலம்பு(ளி)ரி கருப்பணசாமி என அழைக்கபடுகிறது. இந்த மரம் முதிர்ச்சியடைந்து முறிந்து விழுந்தாலும், இன்னும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே கருப்பணசாமி சிலையை வெயிலிலிருந்து காத்து வருகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 கோயில் எப்போதும் திறந்தே இருக்கும். காலை 6 முதல் 6:30 மணி வரை 30 நிமிடம் மட்டுமே நடை சாத்தப்படும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு அரிக்கேசவ வழிவிட்ட அய்யனார் திருக்கோயில், அய்யனார்குளம் கமுதி தாலுகா, ராமநாதபுரம்-623603.  
   
போன்:
   
  +91 9842995736, 9750246368 
    
 பொது தகவல்:
     
  பரிகார தேவதைகளுடன், மேற்கு திசையில் திரும்பிய அய்யனார், தெற்கு, மேற்கு நோக்கி குதிரை வாகனங்கள், அய்யனார் கோயில் கருவறைக்கு செல்லும் வழியில் கருவறைக்கு முன் விநாயகர் சிலை உள்ளது. அதேபோல் அய்யனாருக்கு இடது புறம் தெப்பக்குளத்திற்கு நடுவே வற்றாத உறை கிணறு உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம், திருமாங்கல்யம், கடன் தொல்லை, நோய் பிரச்னைகள் தீர இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அக்னி சட்டி, பால்குடம், திரியாட்டு, நெய்விளக்கு, மாவிளக்கு, கரும்பாலை தொட்டி எடுத்தல் போன்றவை செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  285 எக்டேர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நடுவே வழிவிட்ட அய்யனார் கோயில் உள்ளது. எந்த கோயில்களிலும் சாமி சிலைகளுக்கு இடது புறம் தெப்பக்குளம் இருக்காது, ஆனால் இங்கு உண்டு. அதேபோல் சாமி மேற்கு பக்கம் நோக்கி இருக்காது இங்கு உண்டு. அய்யனார் கோயில்களில் குதிரை வாகனத்தில் குதிரை பாகன்கள் அமர்ந்திருப்பர், இங்கு குதிரை மேல் பாகன் அமர்திருக்கவில்லை. அய்யனார் கோயில் சாமி சிலைகளுக்கு எதிரே ஆணைமுகன் (விநாயகர்) சிலைகள் இருக்கும், இங்கு நந்தி வாகனம் மட்டுமே உள்ளது. பல நுõற்றாண்டுகளாக தெப்பக்குளத்திற்கு நடுவே வற்றாத உறை கிணறு உள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  சிலோன் என்கிற தற்போதைய இலங்கையிலிருந்து அதீத சக்தி கொண்ட ஒருவர் கப்பல் மூலமாக இந்தியா வந்தபோது, தற்போதுள்ள வழிவிட்ட அய்யனார் கோயில் பகுதி ஆழ்கடலாக இருந்துள்ளது. இந்த ஆழ்கடல் பகுதியில் சிவாலயம் கடலுக்குள் மூழ்கி இருந்துள்ளது (கிறிஸ்து பிறப்பதற்கு முன்). அந்த இடத்தில் சுமார் 11 தலைமுறைகளுக்கு முன், அதாவது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கழுகுமலையிலிருந்து தேவர்கள் அழிந்து வருவதற்கு எதிராக போரிட்ட கழுகுமலை கிழவன் என்கிற அரிக்கேசவ வழிவிட்ட அய்யனார், இவரது தம்பிகள் கழுகுமலை அய்யனார் (புதுக்கோட்டை பகுதியில் உள்ளவர்), நிறைகுளத்து அய்யனார் (கீழ நாட்டு பகுதியில் உள்ளவர்) ஆகிய மூவரும் கீழநாட்டு பகுதிக்கு மூவரும் இடம் பெயர்ந்தார்கள்.

கோயில் அமைந்துள்ள இடம் விருதுபட்டி (விருதுநகர்)- கமுதை (கமுதி) கிராமத்திற்கு செல்லும் பாதையில் உள்ளது. இப்பாதையில் கழுகுமலை பகுதியிலிருந்து வந்த கழுகுமலை கிழவன் என்கிற அரிகேசவ அய்யனார் இலந்தை மர வேரில் அமர்ந்து மேற்கு பக்கமாக தேவர்களை காக்கும்பொருட்டு, தேவர்கள் யாரும் அரக்கர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் வருகிறார்களா? என எதிர்பார்த்து அமர்ந்திருந்தார். அப்போது இடைச்சியூரணி சேர்ந்த பால் வியாபாரம் செய்ய இவ்வழியாக தினமும் கமுதைக்கு சென்று வந்துள்ளார். இலந்தை மர வேருக்கு அருகில் வரும்போதெல்லாம், வேர் தட்டி தடுமாறிய வியாபாரியின் பால் பாத்திரம் கீழே விழுந்து பால் கொட்டியுள்ளது.

பால் தினமும் கொட்டிய போதெல்லாம் பசுமாடுகளின் எண்ணிக்கையும், பால் உற்பத்தியும் பெருகி கொண்டே போனது பால் வியாபாரிக்கு. இருந்த போதிலும் பசு மாடுகளின் எண்ணிக்கை, பால் உற்பத்தி பெருக்கத்தை உணராத வியாபாரி இலந்தை மர வேரினால் தான் அடிக்கடி தவறி விழுந்து பால் கொட்டுகிறது என ஆத்திரமடைந்த வியாபாரி, தனது தாயிடம் இதனை எடுத்துகூறி, இலந்தை மர வேரினை கடப்பாரை, கோடாரியால் அறுத்தெடுக்க முடிவு செய்து, வேரினை வெட்டியுள்ளார். வேரினை வெட்ட துவங்கியதும், இலந்தை மர வேரிலிருந்து ரத்தம் பீறிட்டு, வியாபாரியின் கண்கள் குறுடாகியது, வியாபாரி வெட்டியதால் இலந்தை மரமும் நாளடைவில் பட்டுபோனது. ஆனால் அரிக்கேசவ அய்யனார் இலந்தை மர வேரிலேயே தங்கினார். இந்த பட்டுப்போன அமைந்துள்ள இடம் ருத்ராயணம் என்றழைக்கபடுகிறது. இந்த இடத்தில் நெய்வேத்தியம் செய்து, தினமும் அய்யனாருக்கு படைப்பது வழக்கம். நாளடைவில் ருத்ராயணம் மடப்பள்ளியாக மாறி தற்போது சிதிலமடைந்துள்ளது. இந்த மடப்பள்ளிக்கு அருகே சிவகுருநாதர் கோயில் உள்ளது. கோயில்களில் 108 நாமங்கள் மட்டுமே போதிக்கும் நிலையில், அய்யனார் கோயிலில் வழிவிட்ட அய்யனார் அஷ்டோத்ர ஸத நாமாவளிகள் (நாம கோஷங்கள்) 109 போதிக்கபடுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அய்யனார் கோயிலுக்கு வலது புறத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வலது புறம் முறுக்கி திருகியுள்ள இடத்தில் கருப்பணசாமி உள்ளார். வலது புறமாக திரும்பு முறுக்கியுள்ள புளிய மரத்தில் அமர்ந்துள்ளதால் வலம்பு(ளி)ரி கருப்பணசாமி என அழைக்கபடுகிறது. இந்த மரம் முதிர்ச்சியடைந்து முறிந்து விழுந்தாலும், இன்னும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே கருப்பணசாமி சிலையை வெயிலிலிருந்து காத்து வருகிறார்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.