Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு வீரன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வீரன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வீரன்
  உற்சவர்: கரகம்
  தல விருட்சம்: பனை மற்றும் வேம்பு
  புராண பெயர்: கிள்ளை
  ஊர்: கிள்ளை
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி, மார்கழி மாதங்களில் மற்றும் குலதெய்வ வழிபாடு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விழா நடக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வீரன் திருக்கோயில், கிள்ளைஅஞ்சல், சிதம்பரம் வட்டம், கடலூர்-608102.  
   
போன்:
   
  +91 94424 24208, 90431 32892 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப் பக்கம் வாயில், 20 அடி உயரத்தில் மகா மண்டபம், மண்டபத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். நுழைவு வாயில் முன் எட்டு அடி உயரத்தில் பணியாள் குதிரையை பிடித்துக் கொண்டு காவலுக்கு செல்வது போன்றும்  அருகில் பைரவர் தரையில் அமர்ந்து காவல் காப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் வீரன் வலது கையில் கத்தியும், இடது கையில் சுக்குமாந்தடியுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  தீராத நோய், விவசாய அபிவிருத்திக்காக இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆடு, கோழி மற்றும் புறா உயிருடன் தானியங்கள் காணிக்கையாகவும் பக்தர் வழங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  நடார்கள் குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமிகோயில், மேற்கே வள்ளலார் பிறந்த மருதுõர் உள்ளதுடன், கிழக்கே முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக வரும் ஸ்ரீமுஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.  
     
  தல வரலாறு:
     
  கிள்ளை தைக்காலில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான தர்கா உள் ளது. இந்த தர்காவிற்கு சொந்தமான 365 ஏக்கர் நஞ்சை, புஞ்சை மற்றும் குடியிருப்புடன் கூடிய விசாலமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் கிள்ளை, தைக்கால் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்து ம், குடியிருந்தும் வருகின்றனர். இந்த இடத்தில் கோயிக்கும் மேற்கு பக்கத்தில் உள்ள புஞ்சை நிலத்திலும் அந்த நிலத்திற்கும் மேற்கில் உள்ள நஞ்சை நிலத்திலும் செய்த விவசாயங்களை நரி உள்ளிட்ட கொடூர விலங்கினங்கள் அழித்து வந்தது. இவற்றை பாதுகாக்க சென்ற ஒரு விவசாயி கழுத்து அறுக்கப்பட்டு அப்பகுதியில் ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார். அதனால் அந்த குளத்திற்கு இன்றவும் முண்டம் குளம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் தர்கா மானியத்தின் அருகில் விவசாயம் செய்த சொக்கலிங்க நாடார் என்பவர் கனவில் தோன்றியும் அவர் செல்லும் முன் சென்று வயலில் விளைந்த தானியங்களை பாதுகாத்தும் வந்ததை அவர் மற்றவர்களிடம் கூறியதை ஏற்க வில்லை. அதன்பின் அவர் நிலத்தில் மூன்று கல் வைத்து வணங்கிய போது வீரன் அப்பகுதியில் உள்ள வேம்பு மற்றும் பனை மரத்தில் குடி கொண்டு காட்சிக் கொடுத்தார். பலருக்கு உடற்பிணியை போக்கியுள்ளார். நேரில் உணர்ந்த நாடார் சமூகத்தினர்கள் கீற்றுக் கொட்டகையில் குடில் அமைத்து வணங்கினர். தற்போது ஐந்தாவது தலைமை முறையாக குரு பாதநாடார் குடும்பத்தினர்கள் பராமரித்து குலதெய்வ வழிபாடு நடத்துபவர்கள் உதவியுடன் கோயில் கட்டி பராமரித்து வருகிறார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.