Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கவுமாரியம்மன்
  ஊர்: வீரபாண்டி
  மாவட்டம்: தேனி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தினமும் அம்மன், சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இது தவிர சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உற்சவம், தீபாவளி, கார்த்திகை, மார்கழி தனுர்பூஜை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் மாதாந்திர பிரதோஷ காலங்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் பக்கத்து ஊர்களில் இருந்தும் வருகிறார்கள். ஆண்டு முழுவதும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றாலும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் சித்திரைத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவின் போது கம்பம் நடுதல் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கவுமாரியம்மனையும், கண்ணீசுவரரையும் தரிசித்து செல்வார்கள்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு அம்மன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி - 625 534, தேனி மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4546-246242 
    
 பொது தகவல்:
     
  இருகண்களுக்கும் ஒளி பெற்ற வீரபாண்டியன் மன்னன் கவுமாரிக்கும், கண்ணீசுவரருக்கும் கோயில் கட்டினான். இதனால் இப்பகுதி வீரபாண்டி என அழைக்கப்பட்டது.
 
     
 
பிரார்த்தனை
    
  கன்னித்தெய்வமான கருமாரி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். தூய உள்ளத்துடன் தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளித்தந்து காத்து வருகிறாள். கண் மற்றும் அம்மை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்ப்பதில் இத்தலம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

குழந்தை வரம் வேண்டுபவர்களும், தங்களுடைய நோய் தீர விரும்புபவர்களும் இங்குள்ள முல்லையாற்றில் நீராடி கவுமாரியம்மனையும், கண்ணீசுவரரையும் வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற மனமுருகி வேண்டி பலனடைந்துசெல்கிறார்கள்.இந்த கண்ணீசுவரர் சூசிவாயநம' என நெஞ்சுருகி வழிபடுபவர்களுக்கு ஏற்படும் அபாயத்தை சடுதியில் நீக்கும் சர்வ வல்லமை பொருந்தியவர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  தொடர்ந்து 8 நாள் நடைபெறும் இந்த விழாவில் இரவும், பகலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த திருவிழா நாட்களில் பால்குடம், காவடி, அக்னி சட்டி, மாவிளக்கு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபடுவார்கள். 
    
 தலபெருமை:
     
  தேனி மாவட்டம் வீரபாண்டியில் வீற்றிருக்கும் கவுமாரியம்மன் கன்னித்தெய்வமாக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தந்து ஆட்சிசெய்து வருகிறாள்.

கவுமாரியின் கருணை: அன்னை பார்வதி வைகை வனத்தில் தவம் செய்த அதே காலத்தில், மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னனுக்கு ஊழ்வினையால் பார்வை பறி போனது. மன்னனும் இறைவனை மனமுருகி வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவன்,"வைகைக்கரை ஓரத்தில் அன்னை பார்வதி கவுமாரி' என்ற திருநாமத்துடன் தவம் இருக்கிறாள். அவளை வழிபட்டால், உனது விழிக்கு ஒளி கிடைக்கும்" என்று கூறி மறைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வீரபாண்டியன் கவுமாரி அம்மனை உருகி வேண்டி ஒரு கண்ணின் ஒளியைப் பெற்றான். அதே போல் கவுமாரி அம்மன் வணங்கிய கண்ணீசுவரரை வணங்கி மறுகண்ணின் ஒளியையும் பெற்றான்.

கவுமாரியம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீரே அம்மனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரைத்தான் மக்கள் தீர்த்தமாக எடுத்துசெல்கிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  முன்னொரு காலத்தில் வைகை வனத்தில் அரக்கன் ஒருவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிப்பதற்காக பராசக்தி இந்த வனத்திற்கு வந்து கண்ணீசுவரர் என்ற திருநாமத்துடன் ஒரு லிங்கத்தை பூஜித்து தவம் இருந்தாள்.
அப்போது அசுரன் அன்னை பார்வதியை கடத்தி செல்ல முயன்றான். இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி அருகம்புல்லை எடுத்து அரக்கன் மீது வீச, இரு துண்டுகளாக பிளந்து அரக்கன் இறந்தே போனான். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பார்வதியை கன்னித்தெய்வமாக்கி கவுமாரி' என திருநாமம் சூட்டி வழிபட்டார்கள். 
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar