Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தம்பிராட்டியம்மன்
  ஊர்: ஈங்கூர்.
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கார்த்திகை மாத கடைசியில் பத்துநாள் விழா நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  காவல்தெய்வமாக இருந்து ஊரை காத்து வருகிறாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில் ஈங்கூர்- 638058 ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 4294 - 230 487 
    
 பொது தகவல்:
     
 

கன்னியாகவும், தாயாகவும் இருந்து இத்த உலகத்தை கட்டிக்காக்கும் அன்னை சக்தி பல்வேறு வடிவங்களில் தோன்றி தம் மக்களை பேணிக்காத்து வருகிறாள்.


ஈரோடு பெருந்துறை அருகே ஈங்கூரில் தம்பிராட்டியம்மன் என்ற பெயரில் அவள் அருள்பாலிக்கிறாள்.


 
     
 
பிரார்த்தனை
    
 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
  தல வரலாறு:
     
 

கொங்கு வேளாள கவுண்டர்களில் ஒரு பிரிவான ஈஞ்சன் குலத்தினரின் தெய்வமாக இவள் விளங்குகிறாள். ஈங்கூரில் காவிலுவர், சிங்களவர், மாவிலுவர், பூவிலுவர், வெள்ளை வேட்டுவன் ஆகிய இனத்தவர் வசித்து வந்தனர். அப்போது இவ்வூர் சோழ ஆட்சியின் கீழ் இருந்தது.


இந்த இனத்தவர்கள் அரசுக்கு வரி செலுத்தாமல் சோழ மன்னருக்கு பெரும் தலைவலி கொடுத்து வந்தனர். அவர்களை சமாளிக்க வழியில்லாமல் தவித்த சோழன், நான்கு இனத்தவர்களையும் அடக்குபவர்களுக்கு காணி நிலம் கொடுப்பதாக அறிவித்தான்.


தஞ்சையில் வசித்து வந்த ஈஞ்சன் குலத்தவர்கள் ரகுநாதசிங்கய்ய கவுண்டர் என்பவரை தளபதியாக கொண்டு அவர்களை அடக்கினர். இதற்கு பிரதிபலனாக ஈஞ்சன் குலத்தினர் 88 ஊர்களை காணியாக பெற்றனர்.


ஈங்கூரில் வந்து குடியேறிய ஈஞ்சன் குலத்தினருக்கு, மூவேந்தர்களின் எல்லையாக திகழ்ந்த மாயனூர் அருகே மதுக்கரையில் அருள்பாலிக்கும் செல்லாண்டியம்மன் குல தெய்வமாக விளங்கினார். செல்லாண்டியம்மன் அடுத்து பெருமாளை தங்கள் இஷ்ட தெய்வமாக வணங்கினர்.


ஆண்டுதோறும் பெருமாளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதற்காக ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் வழக்கத்தை ஈஞ்சன் குல மக்கள் கடைபிடித்தனர். ஒருமுறை ஸ்ரீரங்கம் செல்லும் போது இடையில் இளைப்பாறி செல்வதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தனர். அப்போது, நிதிக்காப்பாளராக செயல்பட்ட பெரியவர், இளைப்பாறிய இடத்திலேயே பணமுடிப்பை மறந்து வைத்து விட்டு பயணத்தை தொடர்ந்தார்.


பல மைல்கள் நடந்து சென்ற பிறகு பணமுடிப்பு இல்லாததை உணர்ந்த ஈஞ்சன் குல மக்கள், முடிப்பைத் தேடி வந்த வழியே திரும்பி சென்றனர். கடைசியாக தங்கிய இடத்தில் பணமுடிப்பு அப்படியே இருப்பதை கண்டு ஈஞ்சன் குலத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


பணமுடிப்பு அருகில் சென்று பார்த்தபோது அதில் நாகப்பாம்பு சுற்றி காவல் காத்துக் கொண்டிருந்தது. இந்த பணமுடிப்பை காவல் காக்க தங்கள் குலத் தெய்வமான செல்லாண்டியம்மனே நாகமாக வந்தாள் என அவர்கள் எண்ணினர். தங்கள் குல அன்னைக்கு நாள்தோறும் பூஜை செய்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதுக்கரை செல்லாண்டியம்மனை, ஈங்கூரில் தம்பிராட்டி அம்மனாக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.


 
     
சிறப்பம்சம்:
     
   
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.